வா.‌. வா.. என் அன்பே - 79

Start from the beginning
                                    

' நன்றி.. ' என்று இரு கரம் கூப்பி நழுவித்தவளின் செயலில் பெரிதும் தடுமாறியவராய்.. பதில் அளித்து பணிவுடன் நகர்ந்திருந்தாலும் , பூலோக அதிசியத்தை கண்டவர் போல் சிலையாக.. அவள் சென்ற திசையையே வெறித்தவராக நின்றிருந்தார். திகைத்து கேமராக்களின் கண்கள் ஏதும் பார்த்துக் கொண்டிருக்கிறதா என்ற எண்ணம் எழுந்தவுடனேயே சுற்றிப் பார்க்க.. அப்படியும் தெரியவில்லை என்றதும் மீள இயலாது நின்றுவிட்டார் .

இது எதுவும் அறியாமல் சிறுப்பிள்ளையென , விரைந்து ரிச்சர்ட் இருக்கும் தளத்தை அடைந்தவள்.. அவன் அறையின் முன் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டு காத்திருக்க.. ரிச்சர்ட் கதவு திறந்தான் .

" அண்ணே..", என்று அழகாய் புன்னகைத்து நுழைந்தவளின் பார்வையோ , தீவிரமாக தேடி அலைய..

" வா குட்டி.. யாரை தேடுற..", என்றான் மென்னகையுடன் ..

" சாந்தி அக்கா எங்க.. எல்லோரும் வந்துட்டாங்களா.‌. எங்க யாரையும் காணோம்.. நீங்க குளிச்சிட்டீயன்னு சொன்னீய.. என்ன இப்படியே நிக்குறீய...", என்று அடுக்கிக் கொண்டே போக..

" ஒன்னொன்னா கேளுடா குட்டி.. யாரோட வந்த..", என்று அவளது தலையில் கை வைத்து ஆட்டியவனாக சொல்லி சிரித்தான்.

" தனியாதே ண்ணே.. அவிய பொறவு ( பிறகு ) வருவாக.. அவிய வரப்படி வரட்டும்னு முன்னக்க ( முன்பாகவே ) கிளம்பீட்டேன்.. சாந்தி யக்கா எங்கே..", என்று மீண்டுமாக விழிகளை சுழற்ற..

உள்பக்கமாக , கையை காட்டியவனாய் , மீண்டும் புன்னகை சிந்தியவனிடம்.. " நல்லா மாட்டுனேன்..", என்றவளாகவே சென்றாள் ‌ .

தங்கையின் முதுகையே வெறித்திருந்தவாறு இருந்தவனின் கண்களில் தீவிர யோசனை குடியேறி இருந்தது . அவள் வயதிற்குள் எவ்வளவோ கஷ்டங்கள் , சுமைகளை கடந்து வந்திருக்கிறாள் என்பது அவனும் நன்கு அறிவான் . ஒருபொழுதும் , அவள் மலர்ந்த முகத்தில் மாறுதல் தென்பட்டது இல்லை . ஆனால் , இன்று.. அவள் கண்களில் வழியும் வேதனையும்.. அதனை தன் முன் காட்டிக் கொள்ள விரும்பாது மறைக்கும் விதத்திலும் , அதிகமாக குழம்பி நின்றான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now