வா.‌. வா.. என் அன்பே - 77

Start from the beginning
                                    

தாமரையின் உதட்டில் இரத்தச் சுவையை உணர்ந்த பிறகே விலகியவன்.. அவள் முகம் காணவும் மறுத்தவனாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான் . அவள் பேசுவதையே , அவன் விரும்பவில்லை என்பதை சொல்லாமல் சொல்லியதில்.. பொங்கிய கேவல்களை கரத்தால் அடக்கி.. அழுகையில் குழுங்கியவளாக.. . சரண் வருவதற்கு முன்பாகவே.. இதயம் கனக்க வெளியேறிவிடலாமா என்று சிந்திக்க துவங்கிட்டாள் . 

' ஏன் எப்படி செய்தாய்..? ', என்று கேள்வி கேட்டு அறைந்திருந்தாலும் தாங்கியிருப்பாள் ‌ போலும்... ஆனால் , பேசவும்.. முகம் காணவும் மறுக்கும் சரணின் செயல்.. இப்பொழுது , காட்டிய முழு வெறுப்பிலும்.. எங்கோ , ஓரத்தில் எதிர்ப்பார்த்திருந்த நம்பிக்கை செத்து மடிந்ததில்.. தாமரையும் சரணிற்கு நிகராக.. துடிதுடித்துக் கொண்டிருந்தாள் ‌ .

ஒற்றை வார்த்தை பேசாது அவன் நகர்ந்திருந்த செயல்.. வெகுவாகவே , அவளை தாக்கி இருக்க.. மீண்டும் , அதே அறையில் நின்றிருந்தால் , எங்கே.. அவன் திருமணத்திற்கும் வராமல் சென்று விடுவானோ.. என்று அச்சம் ஒருபுறம் எழுந்தாலும்.. மேலும் , காயப்பட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவளாய் தவிக்கையில் , ரிச்சர்ட்டிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது..

" அண்ணே.. சொல்லுங்க அண்ணே.. எழுந்துட்டீயளா..", என்றாள் வரவழைத்த உற்சாகத்துடன்...

எவ்வளவுக்கு எவ்வளவு இயல்பாக காட்டிக் கொண்டாலும் , ரிச்சர்ட் , அவளது எதிர்பார்ப்பை கேள்வியால் முறியடித்து இருந்தான் .

" தாமரைம்மா.. என்னாச்சு.. ஏன் ஒரு மாதிரி பேசுற.. ", என்று அக்கறையுடன் அவன் வினவ..
கண்களை அதிகமாக கரித்துக் கொண்டு வந்தது .

" அப்படி எல்லாம் எதுனும் இல்லை.. ண்ணே.. சரியா தூக்கம் இல்லேல.. அதேன்.. ஆமா , கல்யாண மாப்பிள்ளை நீங்க என்ன.. எனக்கு போன் செஞ்சு பேசீட்டு இருக்கீய.. கிளம்ப ஆரம்புச்சுட்டீகளா இல்லையா..", என்றாள்.

" ம்.. அதுல்லாம் நான் குளிச்சிட்டேன்.. நீ இன்னும் இங்க வராம என்ன பண்ற.. பாரீஸ்ல இருந்தே எல்லோரும் வந்து சேர்ந்துட்டாங்க.. இங்க இருந்துட்டே நீ இன்னும் வர..", என்று முறுக்கிக் கொள்ள.. ஹா..ஹா.. என்று தன் சோகம் மறந்து அழகாய் சிரித்தவள்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now