வா.. வா.. என் அன்பே- 76

Start from the beginning
                                    

அதில் , மயங்கி அழகாய் சிரித்தவன்.. " ஆமா , சீக்கிரமா ரூமுக்கு வந்து என்ன பண்ண நினைச்சீங்க..", என்று தீவிரமாக கேட்க .. அவன் கேள்வியில் திகைத்து , தப்பாக எண்ணிவிட்டானோ , என்று அச்சத்தை தத்தெடுத்து ஏறிட்டால் , கண்களில் தென்பட்ட குறும்புடன் இருக்கவும் , அது ஏற்படுத்திய தாக்கத்திலும் அதிகமாக தடுமாறியவள்.. மடியில் இருந்து எழுந்துக் கொள்ள முயன்றவளை தடுக்காது.. பிடியை தளர்த்தியவன்.. அசையாது இருக்கவும் , மூச்சுவிடவும் சிரமத்திற்கு ஆளானாள் .

அப்பொழுது , ஏன் அவ்வாறு கூறினாள்.. என்றால் அவளுக்கே தெரியாது.. அவன் கோபத்தை தணிக்க வேண்டும் என்பது மட்டுமே எண்ணமாக இருந்ததில் கூறிவிட்டாள் . ஆனால் , இப்பொழுது அதன் அர்த்தம் முழுமையாக விளங்க.. பதில் சொல் தடுமாறி கொண்டிருக்கவும்..

" ஓய்.. பாப்பா எதுவும் கஷ்டமான கேள்வி கேட்டுடேனா.. எனக்காகன்னு சொல்லுவேன் பார்த்தேன்.. எனக்காக இல்லையா..", என்றவனின் குரல் ஒரு மாதிரியாக வெளி வர..

' உங்களுக்காக இல்லையாவா.. உங்களுக்காக தானே.. நான் இந்த வீட்டுக்குள்ளேயே வந்தேன்..', என்று மனதில் அலறிக் கொண்டாலும் , உடல் நடுங்க மேல் அன்னத்துடன் நா ஓட்டிக் கொண்டவளாக , நின்றுவிட..

படுக்கையில் இருந்து இறங்கியவன்.. அவளை நெருங்கி இடைவெளியை குறைக்க.. தாமரையோ , கால்கள் தள்ளாட.. மூளை வேலை நிறுத்தம் செய்ததவள் போல் திருதிருத்து நின்றிருந்தாள்..

" சொல்லு எனக்காக தான..", என்று அழுத்தம் கொடுத்து கேட்கவும்.. ஆம்.. இல்லை என்று அனைத்து திசைகளிலும் தலையை உருட்ட.. அடுத்த நொடி , அழுத்தமாக மூடி இருந்த இதழின் மீது தன் அடர் மீசை மூடிகள் குத்தும் அளவிற்கு இதழ் பதித்திருந்தான் ‌ .

பணம் கொடுத்து திருமண பந்தத்திற்குள் கட்டாயப்படுத்நி இணைத்ததை நினைத்து வருத்தமோ.. வெறுப்போ.. அவளிடத்தில் தென்படுகிறதா என்று தேடியவனுக்கு.. அதுபோல் , எதுவும் இல்லாததுடன்.. ' உங்களுக்காக.. உங்களுக்காக மட்டுமே..' என்று அவள் விழிகள் பேசிய மொழியும்.. சேர்ந்துக் கொள்ள.. அப்போ , என் நேசம் மட்டும் உனக்கு புரியாமல் போகுமா என்று மெல்ல கிளர்ந்த சினத்துடன் இதழில் புதைய.. சுரக்கும் இதழ்தேனை ரசித்து சுவைத்தவனுக்கு.. அவள் விழிகளகல் வழிந்த பிரம்மிப்பு.. வியப்பை கடந்து காதலை காண ஏக்கம் எழுந்து ஆட்டுவிக்கவே , வெற்றிடையில் பதிந்த கரத்தில் அழுத்தம் அதிகரித்தவனாக.. மேலும் இயங்கி.. அவளை தடுமாற வைத்திருந்தான் ‌ .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now