வா.. வா.. என் அன்பே - 74

Start from the beginning
                                    

அனைவரும் ஆவலே உருவாக , காத்திருந்த ரிச்சர்ட் மற்றும் தாராவின் திருமணம் நாளை.. ஆனால் , தன்னவன் வருவானா என்று பயந்தவளாக நின்றிருக்கிறாள் . அவர்களது திருமணத்திற்கான ஆடைகள் அனைத்தும் தாமாரையின்  கைவண்ணங்களே.. அதேபோல் , தினமும் நடைபெறும் கோர்ஸிலும் சேர்ந்துவிட்டாள் ‌. இதனோடு , மேக்கப் செய்வதையும் விடாமல் இருக்கவே காலில் சக்கரத்தை கட்டாத குறையாகவே சுற்றிக் கொண்டிருக்கிறாள் ‌ . இவை அத்தனையையும் தாண்டி.. சில மணித்துளிகளே என்றாலும் உடல் ஓய்விற்கு கெஞ்சும் மணித்துளிகளில் ஓட்டிக் கொள்ளும் தன்னவனின் நினைவுகளும்.. அவன்   மௌனமும் கொன்றுப் புதைத்ததாகவே இருக்க.. பரிதவித்திருந்தாள் .

' மூனு மாசமாச்சு‌.. நாளைக்காவது வருவாங்களா.. என்னை பார்ப்பாங்களா...' என்று தனக்குள்ளாக புலம்பியவளை கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருந்தது‌ அவளது மனசாட்சி . ' உனக்கு எதுக்கு அவசரங்கறேன்.. இப்பவே அத்தனையும் கொட்டிக் கவிழ்கலேனா‌.. தான் என்னங்கறேன்..' என்று காறித் துப்பிக் கொண்டிருக்க.. விண்ணுவிண்ணு என்று தலைதெறிக்க துவங்கிவிடவே.. மெதுவாக , கீழ் இறங்கி இருந்தாள்..

கோபம் கொண்டு கரத்தால் பேசுவான் என்று எதிர்ப்பார்த்திருக்க.. சரணோ மௌனத்தால் மட்டுமல்ல.. முகம் காணவும் மறுத்தவனாக நடந்துக் கொள்கிறான் .  ' ஆண்டவா.. இந்த தவிப்பெல்லாம் நாளைக்கு அவங்க வரதோட முடிஞ்சு போயிடணும்..", என்று தனக்குள்ளாக சமதானம் கூறியவளாய்.. கீழ் இறங்கி.. உறங்குபவர்களின் உறக்கம் கலையாதவாறு மெதுவாக அடி மேல் அடி வைத்து சமையற்கட்டிற்குள் நுழைந்து காபியை தயாரித்துக் கொண்டிருக்க..

" தாமரை இங்க என்ன பண்ற.." என்று ராமின் குரல் இருட்டின் அமைதியை மென்மையாக விரட்டியவாறு கேட்டதில் திரும்பி பார்த்தவள் .

" மாமா.. அது.. அது ஒன்னும் இல்லை.. லேசான , தலைவலி அதான் காபி..", என்று தன் சோகத்தை உள் இழுத்தவளாக கூறி..

" நீங்க.. நீங்க இன்னும் தூங்கலையா மாமா..", என்றாள் .

" ம்... கதவு திறக்கும் சத்தம் கேட்டது.. யாருன்னு பார்க்க வந்தேன்..", என்றவரின் பார்வை அழுத்தமாக படிந்தவாறு இருக்க.. அதன் வீச்சு தாளாமல்..  கோப்பையின் பக்கம் தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now