வா.. வா.. என் அன்பே - 73

Zacznij od początku
                                    

" சரி ப்பா.. நாங்க  கிளம்புறோம்.. கொஞ்சம் ரெஸிடென்ஸி வேலை இருக்கு.. போயிட்டு வரோம்..", என்று ரிச்சர்டிடம் திரும்பியவன்.. "வா மச்சி..", என்று இழுத்துக் கொண்டு வெளியேறிவிட்டான்.

தாரா மட்டுமாக  பெரியவர்களோடு பேசிக் கொண்டிருந்தாலும் சிறு நெருடலுடனே இருந்தவளாக.. ரிச்சர்டை அழைத்துக் கொண்டு தன் வாகனத்தில் புறப்பட்டு இருந்த  விக்கியோ.. நேராக , நின்றது டீ கடையாக இருக்க.. அவசரம் அவசரமாக தன் சட்டை பையில் இருந்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தவனை தடுக்கவும் தோன்றாமல் அமைதியற்றவனாக இருந்த நண்பனை ஏறிட்டவனாய் , அமைதியாக இருக்க..

ரிச்சர்ட்டாகவே வாய் திறந்தான் .‌. "எப்படி.. எப்படி டா.. அவருக்கு மனசு வந்தது.. தா..ம..ரை  என..க்..கு யாருன்னு தெரிஞ்சுதான.. அவ்வளவு மோசமா நடந்துகிட்டாரு.. எ..ப்ப..டி..டா.. அவரால முடிஞ்சது.. பிஞ்சுடா.. எனக்கு கவலையே இல்லை மித்ரன் ஸார் இனி எல்லாம் பாத்துப்பாருன்னு.. அவ்வளவு நம்பிக்கையா.. தேடி போணுச்சு.. ஆனா , என் தங்கச்சி.. அப்படியே சக்கையா என்கிட்ட வந்துச்சுடா.. ஒரு வார்த்தை.. ஒரு வார்த்தை.. என்கிட்ட தப்பா சொல்லலை.. அவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்.. எப்படி டா மனசு வந்தது.. தெரிஞ்சே தாமரைக்கிட்ட அப்படி நடந்துக்க எப்படி முடிஞ்சது.. என்னால தாங்கிக்கவே முடியலை விக்கி..", என்று தன் ஆதங்கத்தையும் , ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியவனாக சிவந்து நின்றிருந்தான் .

அவனாகவே , தெளியட்டும் என்று அமைதியாகவே விக்கியும் இருந்தான் . அதேபோல் , முழு சிகிரெட்டையும் ஊதி தள்ளிய பின் தன்னை ஒரு நிலைக்கு திரும்பியவனாக , இறுகி இருந்த உடலில் விறைப்பு தன்மை சற்று குறைந்திருக்க..

" என்னடா நல்லவனே , எதுவும் பேசாம நிக்கிற.. ", என்று அருகில் இருந்த நீரில் தன் முகத்தை கழுவி துடைத்தவனாக , தன் கைக்குட்டையால் முகத்தை துடைத்து அவனை ஏறிட ,

" ரிலாக்ஸ் ஆகிட்டியா.. ", என்று புன்னகைக்க.. எதுவும் சொல்லாமல் அமைதியாகவே நின்றிருந்ததில்‌... மேலும் , இதழ் விரித்தவன்..

வா.. வா... என் அன்பே...Opowieści tętniące życiem. Odkryj je teraz