வா.. வா.‌. என் அன்பே - 72

Start from the beginning
                                    

கூறும் பொழுது தெரியாத அதன் அர்த்தம் இப்பொழுது புரிய , வெட்கமின்றி பேசியதாக.. தவறாக நினைத்து விடுவானோ.. என்ற சிந்தனையே ஆட்டுவிக்க.. தன் இரு உள்ளங் கைகளையும்.. தொடைகளில் வைத்து.. புடவையை கசக்கிக் கொண்டிருந்தவளுக்கோ.. பதற்றம் அடங்க மறுத்ததாய் .

" எப்படி.. இனி.. எப்படி நா அவிய முகத்தை பார்ப்பேன்..", என்று குழப்பத்தில் உடல் நடுக்கம் எடுக்க.. வறண்ட தொண்டையை எச்சில் விழுங்கி தாகத்தை தணித்தவளின் செயலின் சத்தம் துள்ளியமாக , அவனையும் சென்றடைந்தது .

அவள் விசிறி சென்ற சொற்களின் தாக்கம் குறையாது இருக்க.. பெண்ணவளின் தடுமாற்ற தோற்றமோ.. மொத்தமாய் மேலும் அவள் மீது பித்துக் கொள்ளவே செய்திருந்தது.

தாமரைக்கோ.. சரணின் வேதனையை துடைத்தெறிவதற்காகவே உண்மையை சொல்வதாக தன் உணர்வை வெளியிட்டாலும்... , கணவனிடத்தில் அவளுக்கு இருக்கும் காதலும்.. தெளிவாய் புரிந்த தருணமாக  , இன்பமும் துன்பமும் ஒரு சேர ஆட்டிப்படைத்து..    பெருகிய காதலையும் அனுபவிக்கவிடாமல் தடுத்திருந்ததில்.. அழுத்தமாக விழிகளை மூடி நின்றுவிட்டாள்.

வரைந்த  ஓவியமாக , நின்றிருந்தவளின் முதுகின் அருகே தன் வெப்ப மூச்சுக்காற்று உரச , "நீ என்ன சொன்ன..", என்று கம்பீரம் குறையாமல் கேட்டு திடுக்கிட செய்திருந்தான். .

பட்டென்று , கண்களை திறந்தவளுக்கோ.. அவன் முகம் காணும் துணிவும் வந்திருக்கவில்லை. அவள் பெயரை உச்சரித்தாலே  தன் வசமிழந்து தடுமாறும் ஆண் மகனுக்கு.. இக்கணம் சொல்லவும் வேண்டுமோ !

பின்புறமாய் , நின்றிருந்தவனின் மூச்சுக்காற்று.. பின்னங் கழுத்தில் மோதி மயற்கால்களை கூசச் செய்ய.. முன்புறமாக நகர்ந்துக் கொள்ளவும் வலு விழந்தவளாக.. அசையாமல் நின்றிருக்கவும் ,
"பாப்பா..", என்று மிருதுவாய் அவன் குரல் வருடியதில்.. அவனை காண , ஆடவனின் முகத்தில் மின்னிய ஆர்வமும்.. போட்டிப் போடும் காதலிலும் மீண்டுமாக தன் வசமிழந்தவள்.. தலை சாய்ந்து மௌனம் சாதிக்க..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now