வா.. வா.. என் அன்பே - 71

Start from the beginning
                                    

" இதோ.. இதோ..  இந்த பார்வை தான்டீ.. உன் மேல கோபமும் பட முடியாம.. விலகி இருக்கவும் முடியாம என்னை படுத்தி எடுக்குது . எதுக்கு எடுத்தாலும் தகுதி மண்ணாங்கட்டின்னு டார்ச்சர் பண்ற.. சரி விட்டுப்பிடிப்போம்னு நினைச்சு வேலை பார்க்க போனா.. அதுக்கும் தவிக்கிற.. நீயா வர மாட்டேன்னு நானா இறங்கி வந்தாலும் விலகி போற.. நான் என் தான்டி பண்ணட்டும்.. எப்ப உன்னை அந்த டிப்படார்மெண்ட் ஸ்டார்ல பார்த்தேனோ.. அந்த நொடிலேருந்து என் புத்தில மனசுல.. குடைஞ்சு எடுக்குற.. என்ன செஞ்சா என்னை ஏத்துக்குவன்னு.. பைத்தியக்காரானாட்டம் யோசிக்கிறேன்.. ஒருபக்கம் இதெல்லாம் செஞ்சுதான் என் காதல நிரூபிக்கனுமான்னு கோபம் கூட வருது.. இன்னொரு பக்கம் , அவ என்னை விட்டு போன போது சொன்னது தான் நிஜமோன்னு.. " தோணுது.. என்ற அவன் வார்த்தையை முடிக்கவிடாமல் தாமரையின் மெல்லிதழ் அழகாய் , அவனுடையதை சிறை செய்திருந்தது .

அழுத்தமாக ஒட்டிக் கொண்டிருந்த பூவிதழின் மென் தீண்டலை ரசித்தவனாய்.. அப்படியே , நின்றிருக்க.. அவன் கொடுக்கப் போகும் முத்தத்தை எதிர்ப்பார்த்து இருந்தவளுக்கு.. பெரிய ஏமாற்றமாக இருந்த போதும்.. விலகிக் கொள்ள மட்டும் நினைக்காதவளாக.. பிடிவாதமாய் , அவன் கரத்தை பற்றி அவளது வெற்றிடையை சுற்றிக் கொண்டு.. அவன் கரங்களை அழுத்திப் பிடித்தவளாக வைத்து நின்றிருந்தவள்.. அவன் கற்றுக் கொடுத்த முத்தத்தை முதன்முதலாக.. அந்த முரட்டு இதழ்களில் திருப்பி எழுதியவளாய்.

தாமரை கொடுத்த முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தவனாக.. இருந்த போதும்.. உள்ளுக்குள் பொங்கி எழும் உணர்ச்சிகளை மறைத்தவனாக சிலையென நின்றிருக்க.. கணவனின் இதழ்கள் மட்டுமல்லாமல் விரல்களும் அப்படியே உறைந்து இருப்பதை தாங்கிக் கொள்ள இயலாமல்.. மூடி இருந்த அவளது விழிகளில் ஈரம் இமைகளை நனைக்க துவங்கி இருக்க.. மேலும் , அவன் ஒற்றைக் கன்னத்தை தாங்கியவளாய்.. அவளது மென்பாகங்கள் அழுத்தமாக சரணின் நெஞ்சில் புதைந்து.. அவன் ஸ்பரிச துண்டலுக்கு ஏங்கி துடிக்க.. அதற்கு மேல் முடியாமல் , ஒரு துளி கண்ணீர் வழிந்து அவன் கன்னங்களையும் நனைத்து.. அவனையும் உருகச் செய்ததில்.. அவனுடைய ஐவரில் தடம் அழுத்தமாக, மெல்லியாளின் வெற்றிடையில் பதித்து.. தன்னவளிடத்தில் , தன் உணர்வுகளை நீண்ட நொடிகளுக்கும் பிறகு வெளியிட்டவன்.. எப்பொழுதோ.. அவள் இதழ்களை தனக்குள் சுருட்டி முத்தத்தை தனதாக மாற்றிக் கொண்டிருக்க.. ஆண்டவனின் முரட்டு தீண்டல் , அவளால்  ஏற்பட்ட வலியை காண்பிக்க.. சுகமாகவே , தாங்கி நின்றிருந்தாள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now