வா.. வா.. என் அன்பே - 70

Start from the beginning
                                    

" தாமரைம்மா.. எல்லாம் ஆச்சு.. இந்தாங்க , நீங்க முதல்ல குடிங்க.. அதுக்குள்ள பால் சூடு ஆகட்டும்..", என்று அவளுக்கான இஞ்சி டீயை கரத்தில் திணிக்க..

" ம்ஹும்.. அங்க வைங்க.‌ இதோ , நான் வாரேன்.. அவிய குளிக்க போயே ரொம்ப நேரமாச்சு.. எப்ப சாப்பிட்டாகளோ தெரியலை..", என்று அவனுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மறைந்துவிட.. அப்பெண்மணிக்கோ , அவளை எண்ணி வியப்பாக இருந்தது .

எத்தனையோ , வேலையாட்கள் இருக்கையில்.. இருக்கும் இடத்தில் இருந்து அழைப்பு கொடுத்தாலே.. இரு நிமிடங்களில் அவர்களுக்கு தேவையான பணிகளை நிறைவேறிவிடும். ஆனால் , அதை பற்றிய அக்கறை இல்லாதவளாய் இருப்பது மட்டுமல்லாது , " நீங்க எதாவது குடிச்சிட்டு.. டிபன் ரெடி பண்ணுங்க.. இதோ வந்திறேன்..", என்று சொல்லி சென்றிருந்ததும்.. அவள் மீதான பாசமும் பெருகியது ‌.

மான்சி, இங்கு அவனுடன் வாழ்ந்த வரை , சமையலறையின் பக்கமாக அவள் கால்கள் வந்ததே இல்லை எனலாம் . ஏன்.. உணவு மேஜைக்கு வருவதாக இருந்தால் ஐந்து நிமிடங்களுக்கு முன்பாகவே , நான் ஐந்து நிமிடங்களில் உணவு அருந்த வந்துவிடுவேன்.. என்ற முன் அறிவிப்புடன் இல்லை எச்சரிக்கையுடன் தான் வருவாள் .

அனைத்தும் , மேஜையில் தயாராக இருக்க வேண்டும்.. அதுவும் , அவளுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால்.. அங்கிருப்பவை பறக்கும்... உடன் அமர்ந்திருக்கும் பெரியவர்களையும் நினைத்துப் பார்க்காதவள்.. வேலைக்காரர்களையா மனிதப்பிறவிகளாக நினைப்பாள்.. ஆண்  , பெண் பேதமின்றி கன்னத்தில் அறைந்துவிடுவாள் .

அவள் வீட்டில் தங்கி இருப்பதே அரிது என்றால் ‌... அவள் இருக்கும் பொழுதுகளோ, அனைவரின் இதயமும் திக்திக் என்று அதிர்ந்துக் கொண்டே இருக்கும் . அவளுக்கு நேர்மறையான குணத்துடன் உலவுபவள் தாமரை என்று அவர்களால் நினைக்காமல் இருக்க முடிந்ததே இல்லை .

மான்சியிடம் , காட்டி இருக்க வேண்டிய அதிகாரத்தை.. இன்று இச்சிறு பெண்ணின் மீது சரண் திணிப்பதாக தோன்றினாலும் , அவள் குணத்திற்கு.. சிறப்பாகவே வாழ வேண்டும் என்ற வேண்டுதலும் அவர் அறியாமலேயே எழுந்துவிடும் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now