வா.. வா.. என் அன்பே - 67

Start from the beginning
                                    

நடுவறையில் நின்றிருந்தவனுக்கோ.. என்ன செய்வது என்று தெரியாமல் சில நொடிகள்.. உறைந்து நின்றிருந்தவன்.. பின் , சமையலறைக்குள் நுழைந்துக் கொள்ள.. இரு கண்களை , தன் கைகளால் மறைத்து வைத்து படுத்திருந்தவனின் விழிகளுக்குள்  மனைவியின் பிம்பம் அலைக்கழித்ததாய் .

ஏனோ , அசிங்கம் என்று அவள் உதிர்த்த சொல்லிலேயே ,  வந்து நிற்க.. உள்ளம் கொதித்தாலும் , வெட்கம் கெட்டு , மீண்டும் தானே அவளை அழைத்த செயலை எண்ணி.. அவளிடமே தஞ்சம் புக நினைக்கும் மனதை சபித்தவனாய் கிடந்தான் . முன் மாலையில் , இழுத்து அணைத்து போது.. தவறாக , தோன்றாதது.. பின் மாலையில் , எப்படி அசிங்கமாக மாறியது என்று மறுகியவனுக்கோ.. எரிமலையாய் மண்டையை பிளக்க.. அழுத்தமாக பற்றிக் கொண்டு குப்பறப் படுத்தவனை.. ' ஸார்.. 'என்று வாய் திறக்க வந்த ரிச்சர்ட் , அவன் இருக்கும் நிலையை பார்த்ததும் பரிதாபம் எழ.. அவன் எதிர்பார்ப்பும் புரிய ,

" சரண்.. சாப்பிட வாங்க..", என்று அழைத்திருந்தான் . அவன் அழைப்பிலேயே பட்டென்று எழுந்த சரணோ , " கொஞ்சம் உன் தங்கச்சிக்கும் சொல்லி கொடுடா,", என்று ரிச்சர்டின் பின்னங்கழுத்தை இறுக்கியவனாக.. எழுந்து வர..

வாய்விட்டு சிரித்தவன் , "கொஞ்சம் கொஞ்சமாக மாறிடுவா..", என்றான் .

" இன்னும் மாறலை.. இனிமேலா , மாறப் போறா.. போடா.. டேய்..", என்று அத்தனை சலிப்பு அவனிடத்தில் வெளி வந்தாலும்..
அதன் பின் இருவரும் சகஜமாக உரையாட.. மெல்ல மெல்ல.. சரணுடன் நட்பு பாராட்டியவனாக இருந்தான் .

சரண் டெல்லிக்கு சென்று , வாரங்கள் கடந்திருக்க.. தாமரையோ , தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள் . அன்றைய , அழைப்பிற்கு பிறகு .. அவனிடத்தில் இருந்து எவ்வித அழைப்பு வராது இருக்க.. ஏனோ , அவளாக அழைக்கவும் தைரியம் வராமல் போனதில் நாட்களை நெட்டித் தள்ளியவளாய் இருந்தாள் .

இதற்கு இடையில் , ராமின் கட்டளையால்.. தாமரைக்காக என மயூரியின் கடையிலேயே , மற்றொரு தளத்தில் புதிதாய் அழகு நிலையம்.. அவளுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருக்க.. அங்கு பொறுப்பேற்றிருந்தாள் . அவள் வடிவமைத்துக் கொடுத்த ஆடையையும் தைய்த்துக் கொடுக்கும் பொறுப்பும் இணைந்திருக்கவே.. நேரம் ரெக்கைக்கட்டி பறந்ததாகவே இருந்தது . ஆனாலும் , மனதை அரிக்கும் அவன் நினைப்பில் இருந்து வர முடியாமல் இருந்ததன் விளைவு , இரவு உணவை முடித்து , சாவித்திரிக்கு உதவி செய்துக் கொண்டிருந்தவளுக்கு சரணின் நினைவே ஆட்டுவித்ததாக இருந்தது..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now