வா.. வா.. என் அன்பே - 65

Zacznij od początku
                                    

ப்ரியாவை காரணமாகி விக்கியை அலற வைத்தது போதாது என்று வேண்டுமென்றே , தாராவையும் ரிச்சர்டிடமும்.. தன் வம்புகளை தொடர்ந்து கொண்டு
இருந்தவளை.. எப்படி  மீண்டும் தனியே அழைத்துச் செல்வது என்று சிந்தித்தவனாக சரண் . தனித்திருக்கும் வாய்ப்பை எப்படி உருவாக்குவது.. தாமரையின் குறும்பு பேச்சையும் , கிண்கிணி சிரிப்பை.. எப்படி தன் இதழ்களுக்குள் உள் வாங்கிக் கொள்வது என்று தீவிரமாக சிந்தித்தவனாய் இருந்தான் உதய் .

தன்  மனைவியின் மீதான நேசத்தையும்.. தேவையையும்.. அப்பட்டமாக கண்களால் வெளிப்படுத்திக் கொண்டிருக்க.. கண்டுக்க வேண்டியவளோ , புரிந்துக் கொள்ளாதவளாய்.. சகோதர்களோடு கலகலப்பில் ஈடுபட்டிருந்தாள் ‌.

சரணின் மீதே வந்திருந்தவர் பெரும்பாலானோரின் பார்வை விழுந்திருக்க.. ஒரு சிலர் , அவன் குடும்பத்தவற்களிடமும்.. அவன் மனைவியை யார் என கேட்டு அறிந்துக் கொண்டார்கள் . இரவின் விற்பனையின் நேரம் முடிந்திருந்த போதும்.. மயூரியின் , அழைப்பிற்காக வந்திருந்தவர்கள்.. ஆடைகளை வாங்கிய பின்பும்.. செல்லாமல் ,  சிறு விருந்து.. மொட்டை மாடியில் ஏற்பாடாகி இருப்பதால்.. ஒரு சிலர் தேங்கி இருந்தார்கள் .

ரிச்சர்ட்டை தாராவின் குடும்பத்தவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காக.. அவள் அழைத்துச் சென்றிருக்க.. இருவருமாய் , தனித்து விடப்படவும்.. பல மணி நேரமாக.. மிக அருகே இருந்து இம்சித்துக் கொண்டிருந்த கன்னத்தையும்.. அதற்கு இடையில் இருக்கும்.. இதழ்களையும் தீண்டிப் பார்க்க ஆசை , சரணிற்கு அடக்க முடியாமல் எழவே.. மீண்டும் , தன் அன்னையின் அறைக்குள் அவளை மட்டுமாக அழைத்துச் செல்வதை பற்றிய எண்ணம் மட்டுமே மனம் முழுவதிலும் மேலோங்கி இருப்பதில்.. அவனுக்கு அவனை நினைத்து வியப்பாகி போனாலும்.. அந்த எண்ணத்தில் இருந்து மட்டும் வெளி வராமல் இருக்க.. நொடிக்குள் , அதற்கும் தீர்வு கிடைத்து விட..

" ஓய் பாப்பா.. ", என்று அவள் கபிலனோடு பேசிக் கொண்டிருந்தவளை அழைக்கவும்..

வா.. வா... என் அன்பே...Opowieści tętniące życiem. Odkryj je teraz