வா.. வா.. என் அன்பே - 51

Start from the beginning
                                    

" ஷ்.. அதான் வந்துட்டேனே.. வேலையா இருந்ததுல கவனிக்கலை.. அதுக்கு யாராவது.. இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவாங்களா..", என்று மென்மையான கண்டிப்பை கையில் எடுத்தவனாய் கூறியிருந்தாலும்.. தாமரைக்கு ஏனோ , மனம் அடங்க மறுத்திருந்தது .

அவனது குரலில் இருந்த அந்நியத்தன்மை மேலும்.. அவள் அழு மூஞ்சித்தனத்திற்கு வித்தாக அமைந்ததே தவிர.. சமாதானம் செய்யவில்லை . பாவமாக , ஏறிட்டவளின் வீழி வீச்சை தாள முடியாதவனாய்..

" ம்ச்சு.. இப்ப அதுக்கு என்ன.. அதான் நான் வந்துட்டேன்ல.. இனிமேல் , கவனமா இருக்கேன்.. வா..", என்று விலக முயல..

" ரொம்ப பசிக்குது.. சாப்பிட வாங்க..", என்றாள்..

சரணோ , உள்ளுக்குள் மிகுந்த அதிர்ச்சி அடைந்திருந்தான் . தன் போல் , கண்களோ நேரத்தை ஏறிட.. தான் உணவருந்தியதை கூறவும் விருப்பம் இல்லை.. அதனால் ,

"என்ன பாப்பா இது.. சின்னப்பிள்ளை மாதிரி.. இவ்வளவு நேரம் எதுக்காக சாப்பிடாம இருக்க.. ஆங்.. இரு வரேன்..", என்று மின்னல் வேகத்தில்.. கை கால் கழுவி வந்தவன் , தன் உடையை மாற்றாமல்.. கைகளை மடித்தவனாக.. வெளி வந்து ,

"வா.‌.", என்று அழைத்தவனாக விறுவிறுவென முன்னே நடக்க..
' இவள என்ன பண்றது..', என்று பல் கடித்து சினந்தவனாய்  நடந்திருந்தாலும்.. வேகமாக , உணவு மேஜையை ஆராய ,

"தோசை.. இருங்க வரேன்.." என்று கூறிக் கொண்டே.. அடுப்படிக்குள் நுழைந்து அடுப்பை மட்டுமே பற்ற வைத்திருப்பாள்.. தன் வேக எட்டுக்களோடு அவனும் நுழைந்து..

" நகரு.." என்று அவளை ஒருபக்கமாக நகர்த்தி மேடையின் மீது அமர வைத்து.. அவன் தோசை ஊற்ற... " அச்சச்சோ.. என்ன பண்றீங்க.. நகருங்க..", என்று அவளது பதற்றத்தை கண்டுக் கொள்ளாமல்..

" ஷ்..", என்று ஒற்றை விரலால் , மிரட்டி அடக்கியவனின் செயலில் எப்பொழுதும் போல் பீதி அடைந்தவளாய்.. உறைந்து சிலையாக அமர்ந்துவிட்டாள்..

அவனோ , அவன் பார்க்கும் வேலையில் மிகவும் , கருத்தாக இருந்து .. இரு தோசைகளை ஊற்றி அவளது கரத்தில் திணித்தப் பின்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now