வா.. வா.. என் அன்பே - 50

Depuis le début
                                    

" ஹேய் ஆரவ்.. திருப்பதியா.. எதுக்கு..", என்று அதிர்ந்து கேட்டவளிடம்..

" அப்புறம் , நீ வராம நான் யாருக்கு தாலிக்கட்டுறது.. " என்று அவன்  அதிர்ந்தவன் போல் கேட்டு.. அவளை அதிர்ச்சி அடைய செய்திருந்தான் .

" கல்யாணமா.. இன்னைக்கா..", என்று விழி விரிய.. வாய் பிளந்தவளை..

" மான்சி டியர்.. உனக்கு கொடுத்த டென் மினிட்ஸ்ல.. எப்பவோ , நயன் ஆயிடுச்சு.. ஏர்போர்ட்டுக்கு ரோட் ட்ரேவல் தான் நீ பண்ணனும்.. ஸோ , நீ கார்ல ஏறினதும்.. உனக்கு என்ன கேட்கணுமோ.. கேளு.. ஓகே.. கெட் ரெடி ஸூன்.. சீக்கிரம்..", என்று கூறி பாதியிலேயே தொடர்பை துண்டித்திருந்தான்.

கண்டிப்பாக , அவன் விளையாடுவதாக நினைக்கத் தோன்றவில்லை அவளுக்கு . அதனால் , மின்னல் வேகத்தில்.. குளித்து வெளி வரவும்.. ஆரவ் அனுப்பிய ஆள் வரவும் சரியாக இருக்க.. அவரை பின் தொடர்ந்தவள்.. வாகனத்தில் ஏறிய மறுநொடி , அவனுக்கு, அழைப்பு விடுத்திருக்க.. ஆரவ்வின் இதழ்களோ , அழகாய் விரிந்து..

" தட்ஸ் மை கேர்ள்..", என்று பாராட்டு வாசிக்க.. அவற்றை கண்டுக் கொள்ளும் நிலையிலேயே இல்லாதவளாய்..

" ஆரவ்.. என்ன சொல்ற நீ.. நமக்கு கல்யாணமா.. இன்னைக்கா..", என்று அதிர..

" ஆமா.. அதுல உனக்கு என்ன சந்தேகம்..", என்றான் மிகவும் அசால்ட்டாக..

" ம்ச்சு.. விளையாடாத.. நா.. நா.. நீ.. ம்.. நா.. அங்க வரவே.. மதியம் ஒரு மணிக்கு மேல  ஆயிடும்.. ",

" அதுனால என்ன.. நைட் தான.. நம்ம மேரஜ்.. மறந்திட்டியா.. எங்க வீட்ல.. நைட் தான கல்யாணம் பண்ணுவாங்க..", என்று தெளிவுப்படுத்த..

" ஆனா... ஆரவ்.. திடீர்னு..", என்று தடுமாற்றமாய் குழம்பி தவித்தவளிடம்..

" ம்ச்சு.. போதும் மான்சி.. இவ்வளவு நாள் , நான் உனக்காக அமைதியா இருந்தேன்.. ஆனா , இனிமேல் என்னால அப்படி இருக்க முடியாது.. சரண் அவன் லைஃப்ல செட்டில் ஆயிட்டான்.. நானும்.. நீயும் முடிவு செஞ்சது தான‌. அப்புறம் , என்ன முதல்ல இருந்து ஆரம்பிக்கிற.. உனக்காக.. இன்னும் எத்தனை வருஷம் வேணும்னாலும் நான் காத்திருப்பேன்‌.. ஆனா , அது இனிமேல் நீ என் வைஃப்பா.. மாறினதுக்கு அப்புறமா நடக்கும்..", என்றவனின் குரலில் இருந்த தீவிரம்.. கேள்வி கேட்பதை நிறுத்த தூண்டினாலும்..

வா.. வா... என் அன்பே...Où les histoires vivent. Découvrez maintenant