மஞ்சள் சேர்த்த உறவே - 60

2.8K 65 20
                                    

பகுதி - 60

உதய்யின் நான்கு சக்கர வாகனம் , அந்த புறவழிச் சாலையில் சீறிப் பாய்ந்துக் கொண்டிருக்க.. அதற்கு குறைவில்லாதவனாக , அந்த வாகனத்தை இயக்குபவனும்.. விஷாலியிடத்தில் சீறிக் கொண்டிருந்தான் . ஆனால் , அவளோ.. உரைந்த புன்னகையுடன்.. சுகமான இசைப்பாடலை கேட்கும் பாவனையில் விரிந்த இதழ்களும்.. குறும்பு விழிகளால்.. அவனையே பார்த்தவளாய்.. இல்லை.. ரசித்தவளாய்.. அமர்ந்திருந்தாள் .

அதற்கும் அவன் எரிந்து விழ.. "இப்போ எதுக்காக.. உன் பல் காட்டுற.. வாய மூடுடீ.. ", என்றதும்.. ஹா..ஹா.. என்று வாய்விட்டு சிரித்தவளை முறைக்க முயன்று.. தோற்றவனாய்.. அவள் மலர்ந்திருந்த அழகில்.. நெகிழ்ந்து ரசனையாக தோன்றினாலும்.. முகத்தில் அந்த உணர்ச்சியை காட்டாதவனாய்.. திருப்பிக் கொள்ள..

மீண்டும் அவளது புன்னகை விரிந்ததே தவிர.. குறையவில்லை.. இரண்டாம் மாதம் மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு , அர்ஜுனை காண வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து.. உதய்யையே , அவனுடைய அலுவலகத்தில் விடக் கூறியிருந்தாள் . அதற்காகவே , இவ்வளவு கோபம் அவனுக்கு..

" அது ஏன் மாமா.. நான் ஷேர்கானோட பேசினாலே.. உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது.. ", என்று சிரிக்கவும்..

நன்கு முறைத்தவன்.. " அது என்ன உன் ஹேன்ட்பேக்குல.. எனக்கு காட்டாம.. அவனுக்கு எடுத்திட்டு போறது..", என்று சாக்கை தேடி அலைந்தவனுக்கு .. இன்று காலை.. ஒரு அழகான கிஃப்ட் பாக்ஸை.. கையில் வைத்துக் கொண்டிருக்க.. அவன் பின்னால் இருந்து.. " ஓய் பொண்டாட்டி.. என்ன அது..", என்று தொடப் போகையில்.. வேகமாக கரத்தை தட்டியவள்..

" இது உங்களுக்கு இல்லை.. என் ஷேர்கானுக்கு.. ", என்று கூறி தன் கைப்பையிற்குள் திணித்துக் கொண்டவள்..

"ஆஸ்பத்திரியில செக்கப் முடிச்சதும்.. அர்ஜுன் ஆஃபீஸ்ல என்னை டிராப் பண்ணீடுங்க..", என்றாள் .

" ஏன்.. நீ எதுக்காக அவன் ஆபீஸ் போகணும்.. அவன் வந்து உன்னை பார்க்க மாட்டானா.. நீ அங்கெல்லாம் போக வேண்டாம்.. நான் அவனை ஈவினிங் வர சொல்றேன்..", என்று கடுகடுக்க..

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now