மஞ்சள் சேர்த்த உறவே - 52

1.3K 45 7
                                    

பகுதி - 52

விஷாலியால் அதை ஏற்க முடியாது என்பதை ..அவள் நிலையை நன்கு அறிந்தவன் என்பதால் தெரிந்தே இருந்தான் . ஆனாலும் , தன் ஸ்பரிசம் லேசாக தீண்டியதற்கே மயங்கி வீழ்வாள் என்பது நினைத்தே பாராதது ..

மயங்கி சரிந்தவளை கீழே விழாமல் நொடியில் தாங்கியவன் படுக்கையில் கிடத்தியிருந்தான் .

மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்து அவனுள் பெரும் கிலியை ஏற்படுத்தியவளிடம் மௌனமாக..

"ஏன்டீ.. ஏன்டீ .. இப்படி..", என்று புழுவாய் துடித்து.. சில மருந்துகளை கொடுத்து.. அவள் விழிப்பிற்காக.. காத்திருக்க துவங்கினான் .

ஒருமணி நேரம் கடந்தும் நினைவு திரும்பாமல் இருக்கவும்.. உதய்க்கு மெல்ல தன் பயம்  அதிகரிக்கவே.. நொடியும் தாமதிக்காமல் , நேரங்காலம் பாராமல்.. ஷீலாவிற்கு அழைத்து விவரத்தை கூற.. அவனின் பதற்றத்தை புரிந்துக் கொண்டவர்.. அவனிடம் ஆறுதலாய் பேசி வைத்தவுடன் தீபனை அழைத்து.. உதய்யின் வீட்டிற்கு செல்ல சொல்ல.. அவனும் ஊட்டிக்கு வந்துவிட்டதாலும்.. உதய்யின் விருந்தினர் வீட்டில் இருக்கவே.. அருகில் இருந்த அவன் வீட்டிற்கு விரைந்து  சென்றுவிட்டான்.

அவன் வருகை சந்திராவிற்கு வியப்பு அளித்தாலும்.. உதய் வரச் சொன்னதாக.. கூறி அவரின் பதிலையும் எதிர்பார்க்காதவனாய் மாடியேறிவிட்டான் . உதய்யின் முகத்தில் வேதனையின் சாயல் மட்டுமே எஞ்சியிருக்க,..' என் விரலை கூட தொட தைரியம் இல்லாதவ.. எதுக்கு டீ என்னை நினைச்சு கலங்குற.. நீ என் பக்கத்தில இருந்தாலே  போதுமே..  எதுக்கு டீ.. ஷாலு..'  என்று மனம் அறற்றினாலும்.. அவளை மட்டுமே வெறித்தவனாக இருந்தான் .

இத்தனை நாட்களாக, அவள் தனக்கு அளித்தது எல்லாம் தண்டனையே அல்ல.. இன்று விரல் உரசியதையே ஏற்க முடியாதவளாய் மயங்கி சரிந்தது மரண வலி ஏற்படுத்த.. தாங்கிக் கொள்ள சக்தியற்றவனாய்.. மரத்து கிடந்தான் . செய்த தவறுக்கு அவள் அளித்த தண்டனைகள் எதுவும் போதவில்லை போலும்.. விழி திறவாமல் இருந்து சோதித்துக் கொண்டிருந்தாள்.. " எனக்கு என் பக்கத்தில் நீ இருந்தாலே போதும் ஷாலு.. கண்ணு முழிச்சிடும்மா..", என்று மனம் ஓலமிட , செவி சாய்க்க மறுத்தவளாய் கிடந்தவளை பார்க்க முடியாமல்.. அந்த அறையில் இருந்து வெளியேற கதவை திறக்கவும் தீபன்.. அதன் அருகே வருவதற்கும் சரியாக இருந்தது . தன் நண்பனை கண்ட பிறகோ , வேகமாக அணைத்துக் கொண்டு.. மனைவியின் மயக்கத்தை  பற்றி கூறி.. வெறுமையாக சன்னலை வெறித்து நின்றிருந்தவனின் தோற்றம் கண்டு.. வருத்தம் எழுந்த போதும்.. மருத்துவனாய் , விஷாலியை சோதித்து அவன் தோளை தொட்டு அமர வைத்தவன்.

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now