மஞ்சள் சேர்த்த உறவே - 38

1K 41 1
                                    

பகுதி - 38

தான் மருத்துவமனையில் தங்கவே மாட்டேன் என்று அடம் பிடித்தவனாய் இருந்தவனை சமாளிப்பதற்கே.. மறு ஜென்மம் எடுத்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்க.. கடந்த மூன்று நாட்களாக விஷாலியை அவனோடு இருக்க அனுமதித்தற்கு சொல்லவும்.. வேண்டுமா.. இந்த இரு வருடங்களாக அவள் செய்த அலுச்சாட்டியத்தை எல்லாம் தவிடு பொடியாக்கியது போல் உதய்யின் நடவடிக்கைகள் இருந்தது.‌.

' சரிதான் போடா.. ' என்று அலட்சியமாகவும் நடந்துக் கொள்ள முடியாத அளவிற்கு.. அவள் இருந்ததை சரியாக அவனுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் . பள்ளியில் விளையாடும் பொழுது.. அடிப்பட்டாலே.. துடிதுடித்து போவாள்.. இப்பொழுதோ.. இந்த விபத்திற்கு காரணமே அவளாய் இருக்கும் பொழுது.. இயல்பாகவோ..  அலட்சியமாகவோ.. இருக்கவே மாட்டாள் என்று சரியாக நாடியை பிடித்தவனாய்.. நடந்துக் கொண்டான் .

முன் தினம் போல் , விடிந்ததும் ஓடி வந்தவளை.. ஆழ்ந்த பார்வையை பதித்தே இருந்தவன்.. அவனுக்கு உதவ முன் வந்த பொழுது , " எனக்கு நர்ஸ் வேலை பார்க்குறதுன்னா.‌. நீ தேவையே இல்லை.. " என்று கண்களை மூடிக் கொள்ள.. விஷாலிக்கு கண்ணை கரித்து வந்தது..

முதன்முதலாக.. ஆதியோடு.. சுவர் ஏறி குதித்து வெளியே சென்ற பொழுது.. இப்படி தான் முழுவதுமாய் அவளை தவிர்த்தவனாய் நடந்துக் கொண்டான்.. ஆதியோடு சென்று வந்ததைவிடவும்.. உடன் அர்ஜுன் வந்ததே அவனின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தது.. அதன் பின் இதுபோல் முகம் காட்டியது.. அவன் வகுப்பில் படித்த ஒரு பெண்ணை இணைத்து விளையாட்டாய் அவளோடு பேசிய பொழுது..

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அன்று எப்பொழுதும் போல் அவனை தேடி விசிட்டர் இடத்திற்கு வந்தவளின் அழகில்.. மெய் மறந்தவனாய் நின்றிருந்தான் . இளமை பருவத்திற்குள் இருந்த.. அரும்பு மீசை முளைத்த ஆடவனுக்கு.. இரத்த அழுத்தம் எகுறியது.. அவளது எளிமையான பாவாடை தாவணி அலங்காரத்தில்.. அவன் அதுபோல் உடையணியும் பெண்களை பார்க்காதவன் இல்லை.. ஆனால் அவன் படிக்கும் பள்ளியிலோ.. பழகும்  குடும்ப நண்பர்களின் வீட்டுப் பெண்களோ அணிந்து பார்த்ததில்லை..

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now