மஞ்சள் சேர்த்த உறவே - 18

1.1K 41 8
                                    

பகுதி - 18

முதல் நாள் கல்லூரிக்குள் வந்தவள் சுடிதார் அணிந்து வந்தது.. தவறாகி போனது. சுற்றும் முற்றும் பார்த்தவாறு தயங்கி.. தயங்கி.. நடந்து வந்தவளின் தோற்றமும் சிறுபெண் போல் இருக்க... அந்த கல்லூரிக்கே தலையாய் இருக்கும் கூட்டத்தில் இருப்பவள்..

" டேய்.. யாருடா அந்த பீஸு.. புதுசா இருக்கு.. கூப்பிடு இங்க.. " என்று அவள் கூறவே.. அவளோடு இருந்தவன்.. "ஏய்.. ஏய்.. இங்க வா.."  என்று சொடுக்கிட்டு அழைத்தான்.

" நானா.."என்றாள் விஷாலி

" ம்.. ஆமா.. வா.. வா.." என்று அதிகாரமாக..

"என்ன.. "என்றாலும் குரல் சத்தமாக வெளி வரவில்லை.. விசாலியின் கண்களோ.. அந்த ஆறு பேரையும் அளவெடுத்துக் கொண்டிருந்தது.. அதில் நான்கு ஆண்கள்.. இரண்டு பெண்களுமாய் இருந்தார்கள்..  ஒரு பெண் மிக தெனாவட்டாக இருந்தது போல் இருக்க.. இவள் தலைமையிலே இயங்குகிறது என்று புரிந்துக் கொண்டாள்.

" உன் பேர் என்ன..",என்றான் அவர்களுள் ஒருவன்.. உள்ளுக்குள் எழும் சிரிப்பை மறைத்து.. விசாலி என்றாள்..

"என்ன லி.. "

"விசாலிடா.." என்றான் அழைத்தவன்

"அட.. ஒரு எலி.. ரெண்டு எலின்னு..
அஞ்சலி எங்களுக்கு தெரியும்.. இதென்ன புது லியா இருக்கு.." எனவும்

இரு கன்னத்தையும் உள்ளுக்குள் இழுத்து.. கடித்து சிரிப்பை அடைக்கியவள் தலையை குனிந்துக் கொண்டாலும்.. என்ஜாய் செய்தாள் என்றே கூறலாம்..

"ஏய் நீ விசமா இருந்துட்டு போ.. இல்ல எலியா.. இருந்துட்டு போ.. எங்களுக்கு என்ன வந்தது.." என்றது பெண்ணின் குரல்..

"நீ நீயூ அட்மிஷனா.." என்றான்  ஒருவன்..

" அது எதுவா இருந்தா என்ன மச்சி.. இப்ப இந்த மேடம் நமக்கு சல்யுட் அடுச்சுட்டு.. உன் கை பிடிச்சு நம்ம கிள்ஸ்ல விட்டுட்டு போக சொல்லு.."மிக தெனாவட்டாக கேட்டாள்.. விழிகளில் திமிரை படரவிட்டிருந்த பெண்.

' அடக் கொடுமையே... படிக்க வரவங்களுக்கு இது ஓகே.. வேலைக்கு வர ஸ்டாப்க்கும்.. இதுவா நிலைமை.. ' என்று நினைத்து.. அழுத்தமாக ஏறிட்டாலும்.. "செய்யலேன்னா என்ன பண்ணுவீங்க.." என்று சிரித்தபடியே கேட்டாள்..

மஞ்சள் சேர்த்த உறவே Where stories live. Discover now