வா.. வா.. என் அன்பே - 39

Start from the beginning
                                    

அவளை அழைத்த காரணத்தையும் மறந்தவனாக , அவளிடத்தில் இருந்து புறப்படும் சுகந்தத்தை ஆழ்ந்து நுகர்ந்தவனுக்கோ , விலகவே மனமில்லை.. தன் அருகே , உணர்ச்சிகளின் பிடியால் துடிக்கும் அவளது இதழை.. உடனே பொருத்திக் கொள்ள எழுந்த வேகத்தை , சில நிமிடங்கள் கட்டுக்குள் வைத்திருந்தான்.. இனி முடியவே முடியாது என்றானதுமே , மேலும் நெருங்கிய பொழுது , கதவை தட்டியவாறு சாவித்திரியின் குரல்.. கரங்கள் இரண்டும் பின்னிக் கொள்ளாமல் , இதழில் தேன்சுவையை ருசிக்காத போதும்.. இருவரின் , மூச்சுக்காற்று மட்டும் அலையென கிளம்பி ஒன்றோடு ஒன்று உரசிய நிலையில் இருக்க.. மயக்கத்தில் இருந்து வெளிவரவே முடியாமல் போனது . முதலில் , சுதாரித்தவன்.. சரணே..

" ஆங்.. இதோ வரேன் அத்தை..", என்று கழுத்தை திருப்பி சப்தமாக குரல் கொடுக்கவும் , விழியை திறக்க.. அப்பொழுதும் மலங்க மலங்க விழித்தவளாய்..

" ம்கூம்.. இப்படியே இருந்தா சரி வராது.. நீ சீக்கிரமா ட்ரஸ் சேஞ்ச் பண்ணீட்டு வா..", என்று விலகி கதவை நெருங்கி இருந்தாலும்.. "வா.. வந்து லாக் பண்ணிக்க..", என்று அசையாமல் அவள் இருந்ததை பார்த்து.. கேள்வியாக சொல்லவும்.. " ம்..", என்று அருகே வந்தவளிடம் , தன்னை கட்டுப்படுத்த முடியாதவனாக , வேகமாக இதழோடு இதழ் பொறுத்தி தன் முத்திரையை பதித்தவன்.. அதே வேகத்தோடு வெளியேறி இருந்தான் .  அவன் செய்த செயலின் மாயங்கள் தாளாமல் , தடுமாறியவளாக இருந்தது என்னவோ தாமரையாகவே இருந்தாள் .

தவிப்பாய் , நின்றிருந்த சாவித்திரியிடமும் அவள் துணி மாற்றுவதாக கூறி.. மீண்டும் உணவருந்து இடத்தில் அமர்ந்துக் கொள்ள.. பத்து நிமிடங்கள் கடந்தும் அவள் வராமல் இருக்கவே.. இருமுறைக்கு மேல் சரணின் பார்வை அந்த அறையின் கதவை மீண்டு வந்திருந்தது..

" தாமரை.. என்ன பண்ற..",  என்று குரல் கொடுத்திருந்தார் மயூரி.. அவனை கவனித்தவராய்.. அவர் குரலுக்கே கலைந்தவள்.. " இதோ .. இதோ வந்துட்டேன் அத்தை ", என்று விரைந்து ஆடையை மாற்றிக் கொண்டு வெளி வர.. அனைவரும் அவளுக்காக காத்திருந்தார்கள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now