வா.. வா.. என் அன்பே - 38

Start from the beginning
                                    

"இது என்ன கேள்வி வீட்டுல.. அடுப்பாங்கறைலே..", என்று எரிச்சலான குரலோடு தொடங்கியவள்.. சரண் செய்து வைத்த செயலின் தாக்கம் மீண்டும் வந்து ஒட்டிக் கொண்டதில்.. நாணத்தால் சிவந்து.. முனங்களாய் பதில் அளித்த விதத்திலேயே.. அவன் செய்த செயல் புரிந்திருந்ததில் பலமாக நகைத்தவனின் மனம் குழப்பத்திலிருந்து சட்டென்று வெளி வந்திருந்தது .

" ம்..ம்.. நான் வந்து படம் பிடிச்சா சும்மா விடுவாரா..", என்று கேலியில் இறங்க.. இப்பொழுது தாமரைக்கு தலையே வெடிப்பது போல் ஆனது.. " அண்ணே அவியதான் எதுக்கு கோவப்படுறாக.. என்ன பேசுறாகன்னு தெரியாம இருக்கேன்னா.. நீங்களும் , சேர்த்து குழப்பிவிடாதிய.. உங்களுக்கு புண்ணியமா போவும்.. எதையும் தப்பு தப்பா செஞ்சு.. என்னைய வேதனைக்கு ஆளாக்காதீய..", என்று சரண் செய்த செயலால் உண்டான கோபமும் தன் தமயனின் கேலி சிரிப்பும்.. அவளை கொதிநிலைக்கு கொண்டு சென்றதில் வெடித்தவள் பட்டென்று , அலைபேசியை துண்டித்திருந்தாள் .

வேந்தனுக்கு தாமரையின் வார்த்தைகளை கேட்டு திக்கென்று இருந்தாலும்.. சரணின் நிலை புரிந்ததில் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான் . வந்த வேகத்திலேயே , வெளியேறிய சரணுக்கு வெகுவாக தாமரை தேவையாய் இருந்தாள் . மான்சியின் நிழலையும் தீண்டுவதற்கு இருக்கும் ஒவ்வாமையை நினைத்து வியந்து போனான் . அதேபோல் , தாமரையை பார்த்த நாள் முதலில் இருந்தே , ஏற்பட்ட உரிமையும் உணர்வும் மான்சியிடமும் வர மறுத்திருந்த ஒன்று.. அவளை தேடி அலைந்தவனுக்கு‌.. அவளது பிம்பம் விழுந்தவுடன்.. புதைந்துக் கொள்ள எழுந்த ஆசையையும்.. வேகமும்.. மோகமும்.. அவனுக்கே புதிதான ஒன்று.. அவள் மீது வைத்த காதலின் அளவை முழுதாக புரிந்துக் கொண்ட நேரம்.. மான்சியிடம் நடிப்பிற்காகவேனும் .. நெருங்க முடியாத அந்த நேரம்.. தாமரை அவனுக்கு எவ்வளவு உயிரானவள் என்று..

உடனேயே , மனைவியை தேடி ஓடி வந்தால்.. கொஞ்ச நேரம் அவளை காணது தவித்த தவிப்பின் உச்சத்தை இதழ்களின் மூலம் வெளிப்படுத்த.. வேந்தனின் வரிகள்.. அலையலையாய் எழுந்து.. மொத்தமாக வீழ்த்தியது.. தன்னிலை மறந்து மூழ்கியபொழுது.‌ அவளது விலகல் சமட்டி அடையாக தாக்க.. திக்கித்திணறி அளித்த பதிலால் வலி குறைந்தது போல் இருந்தாலும்.. 'அது எப்படி என்னை விலக்கலாம்..' என்று ஆத்திரம் மட்டுமே சொந்தமானது.. அதே சமயத்தில் , அவளது பயத்தை பார்த்த பின் அவளிடம் இதுவரை , காட்டுமிராண்டி போல் நடந்துக் கொண்ட முறை நினைவில் எழுந்து இம்சிக்க.. குற்றணர்ச்சியால் இதயத்தை கசக்கிப் பிழியும் உணர்வு.. உடனே , அவளிடத்தில் தன் நேசத்தை வெளிப்படையாக பகிர்ந்துக் கொள்ள வேண்டும்.. என்ற வேகம்..

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now