வா..வா.. என் அன்பே - 33

Começar do início
                                    

" அவனையே கேளு.. ", என்று வெப்பக் காற்றை வெளியிட்டவனாக.. சரண் முகத்தை திருப்ப.. ரிச்சர்ட்டோ,

"எங்க அம்முவை..  நாங்க எங்க வீட்டுக்கே கொண்டு போறோம்.. தேவையில்லாத எந்த விஷயமும் வேண்டாம்ன்னு நினைக்கிறேன்..", என்ற பதிலில்..

" அப்படி என்ன தேவையில்லாத விஷயம்.. ", என்று சரண் எகுறிக் கொண்டு வர..

" என் தங்கச்சி இழந்தது எல்லாம் போதாதா.. நாளைக்கு வேற விதமான அசிங்கமும் படணுமா..", என்று சூடாய் கேட்கவும்.. விக்கிக்குமே , அவனுடைய பதில்.. கோபத்தை ஏற்படுத்த.. " நீ என்னடா சம்மந்தம் இல்லாம உளறீட்டு இருக்க..", என்று கூறி, முறைத்தவாறே..

" எதுக்காக.. அம்முவை இவங்க வீட்டுல எல்லா காரியமும் செய்ய வேணாம்னு சொல்ற.. அதுக்கு என்ன அவசியம் இருக்கு.. ரிச்சி.. உனக்கு என்ன ஆச்சு.. தாமரை அவன் பொண்டாட்டி இல்லையா.. அப்போ , அவன் முன்னே நின்னு காரியம் செய்யாம.. யாரு செய்வா..", என்று விக்கியும் வாதிட..

" ம்ஹும்.. அப்படியா என் தங்கச்சி ஃபேமஸ் ஆக்டர் சரண்மித்ரனோட மனைவியா.. இல்ல மனைவி மாதிரி காசுக்கு வந்தவளா..", என்று கேள்வியில் வெடுக்கென்று அவன் திரும்பினால்.. விக்கியின் முகமோ சுருங்கியது..

" அவ உங்ககிட்ட காசு கேட்டா.. நீங்க உங்களுக்கு தேவையானதை வாங்கீட்டு கொடுத்தீங்க.. அதோட சரி.. இந்த விஷயத்தை எல்லாம் நாங்களே எங்க குடும்பத்தில பாத்துக்குறோம்.. உங்களுக்கு எந்த சிரமமும் வேண்டாம்.. அவ.. அவ நிலைலேயே இல்லை.. அழுகும் போது , எதாவது வாய் தவறி சொன்னாலும்.. உங்க சொசைட்டி ஆளுங்க வருவாங்க.. கூடவே , மீடியாவும்.. மேலும் மேலும் குத்திக் கிளறி.. வேண்டாம்.. ஒரு வேலைக்காக பணம் கொடுத்தீங்க.. அந்த வேலைய.. அவ செஞ்சுட்டு இருக்கா.. அந்த அளவோட நீங்க இருந்தா போதும்.. காரியம் எல்லாம் முடிஞ்சதும் வாங்கின காசுக்கு நானே.. அவளை அனுப்பி வைக்கிறேன்..", என்று திரும்பியே பார்க்காமல் நகர்ந்து விட்டான் . கேட்டுக் கொண்டிருந்த ராமிற்கும் தன் மகன் வாய் திறக்க மாட்டானா என்று எதிர்ப்பார்க்க.. அதை பொய்யாய் மாற்றியிருந்தான் .

வா.. வா... என் அன்பே...Onde histórias criam vida. Descubra agora