வா.. வா.. என் அன்பே - 26

ابدأ من البداية
                                    

" ம்..  நீ பார்த்த வேலைக்கு ஒரு அப்பன் கிடைக்கும் போது.. எனக்காகன்னு வராம என்ன.. போடா டேய்.. " என்று தூசியாய் தட்டி.. அசைய மறுத்திருந்தான்..

" என்ன மச்சி.. புது நட்பு அசையவே கூடாதுன்னு சொல்லி ஆடர் போட்டு ஓடிப் போயிட்டானா.. அவ என் பொண்டாட்டிடா.. அவளுக்கு நீங்க காவலா.. ஹா.. ஹா.. " என்று சிரிக்க..  அவன் கடைசியாக உதிர்த்த சொல்லை உணர்ந்து கூறினானா.. இல்லையா என்றே தெரியவில்லை.. ஆனால் விக்கி திகைத்துவிட்டான்.

அதன் பின் நண்பனை அழைக்கவில்லை.. தன் அத்தை மகனோடு பறந்துவிட்டான் . சிறிதுகாலம் , சந்தோஷுடன் இருந்து,தொழிலை கற்றுத் தருவதாக கூறியதில்... ஒருவராலும் மறுக்க முடியாமல் போனது. ஆனால், அவனோடு தாமரையை அழைக்க.. மறுத்துவிட்டார் ராம்..

அவ்வளவு எளிதாகவெல்லாம்.. அவன் கிளம்பியிருக்கவில்லை.ராம் பத்திரிகையாளர்களை , அழைத்து கூறிய அன்று.. அனைவரையும் மிரளடித்த பின்பே, நாட்டின் எல்லையை தாண்டி.. சென்று இருந்தான் .

இன்றோடு, சரண் வெளியூர் சென்று முப்பது நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது.. வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் தாமரை ஒர் அங்கமாகி போனாள் . வீட்டில் உள்ளவர்களில் தொடங்கி வேலையாட்களுக்கு வரை, அவளின் தேவை மிகவும் தேவையாகிப் போனது.

அவனில்லா நாட்களில், அவன் அறையில் தனித்து இருக்க மாட்டேன்.. என்று அடம்பிடித்தவளோடு போராட முடியாமல்.. சசியுடைய அறையில் தங்கிக் கொள்ள சொன்னால் , அதற்கும் அவள் அலற.. " பின்ன என்ன சமையலறைல படுத்துக்கணும்னு ஐடியால இருக்கியா.. "  , என்று காட்டமாக ஓங்கி, மயூரி குரலை  உயர்த்திய பின் அடங்கியவள்..

" தாமரை என்னோட படுத்துக்குறியா.. அண்ணி அவன் வர  வரை என் கூட இருக்கட்டும் " என்று சாவித்திரியின் தலையீட்டால் மட்டுமே மற்றொரு அமர்க்களம் தவிர்க்கப்பட்டது.

அனைவரின் குணமும்.. எளிமையும் பிடித்துப் போக.. தாமரையும் வெகு இயல்பாக ஒட்டிக் கொண்டாள். அவளின் பொறுமையும் அமைதியும் நிச்சயமாக.. தன் இரும்பு மகனின் மனதை மாற்றி.. பழைய மகனை மீட்டெடுத்து தருவாள் என்ற நம்பிக்கை.. அங்கிருந்த அனைவருக்கும் இருந்தது.

வா.. வா... என் அன்பே...حيث تعيش القصص. اكتشف الآن