மஞ்சள் சேர்த்த உறவே - 28

Começar do início
                                    

" அண்ணா.. 500 ரூபாய்க்கு 2+2 ல காமிங்க.. " என்றதும்

" அக்கா.. இதெல்லாம் அராஜகம்.. நீங்க வாங்க.. எங்க ஸாருக்கு நானே இதை சாக்காவச்சு எடுத்துக் கொடுத்துக்குறேன்.. " என்று பிடிவாதம் பிடிக்கவே.. எவ்வித கல்மிஷமும் இல்லாமல் அவள் கூறுகிறாள் எனறு புரிந்தே இருந்தாலும்.. அவளை எடுக்கவிடுவதில் உடன்பாடில்லாமல் இருக்க..

" ஏய்.. உதை வாங்க போற நீ.. 1000ல 2+2 ல.. ம் சைஸ்.. 40 காமிங்க.. ", என்று தயங்காமல் கூறி.. " சீக்கிரமா செலக்ட் பண்ணு.."  என்றதோடு இருவரிடமும் சொல்லி அவள் ஒதுங்கிக் கொள்ள ருத்ரா.. செய்த அல்லம்பலில்.. ஷாலியின் இறுக்கமும் தளர்ந்தேவிட்டது..

ஒருவழியாக நான்கு சட்டையை கையில் வைத்து கொண்டு "சொல்லுங்கக்கா.. எது ஸாருக்கு நல்லாயிருக்கும்.." என்று ஆர்வமாக கேட்டதில் குவியலாய் கிடந்த சட்டைகளில் இருந்து  வெளிர் பச்சையில் மெல்லிய கோடு போட்டதாக இருந்த சட்டையை கையில் எடுத்தவள்..

" இந்தா இதை பில் போடு.. இந்த மாதிரி அவங்கட்ட கிடையாது.. அப்புறம் இது.. ", என்று இரு சட்டைகளை எடுத்துக் கொடுத்து.‌. 1000 ரூபாய்க்கு இரண்டு சட்டைகள் என்று எடுத்து..  " இந்தா.. பணம்.. ஆயிரத்தி ஐம்பது ரூபா தெண்டம்", என்று வெளியேறிவிட்டாள்..

இருவருக்கும் அவள் கூறியதை.. சரியாக தான் கேட்டோமா என்று நினைக்கும் அளவிற்கு எரிச்சல் மேலிட்டவளாய் பேசிட..  சற்றுமுன் அவள் கூறியது மனதில் பதியாமலே போனது.

கல்லூரி வளாகத்திற்குள் நுழைவதற்குள் பலமுறை விஷாலி வாய்க்கு ஓய்வே அளிக்காமல் திட்டி தீர்த்துவிட.. " இதுக்கு நீங்க எடுக்காமலே இருந்திருக்கலாம்.."  என்று ருத்ரா கூறிய பிறகே அடங்கினாள் .

"அக்கா.. ரெண்டுமே ஸாருக்குன்னா.. நீங்க ஒன்னே வாங்கியிருக்கலாம்.. நல்ல க்வாலிட்டியாவது இருந்திருக்கும்.."

முறைப்போடு.. " எடுத்தது எல்லாம் இல்லை.. ஒன்னு என் தம்பிக்கு..",  என்று கூற..

மஞ்சள் சேர்த்த உறவே Onde as histórias ganham vida. Descobre agora