வா..வா.. என் அன்பே -21

Start from the beginning
                                    

நான் மணந்து கொண்டவள் என்று அழைத்து வந்த தாமரையை.. எங்களின் முன்பும் மணந்துக் கொள் என்று கூறி.. குடும்ப அளவில் வெகு விமர்சனையாகவே, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்தேறி இருக்க.. இதை சற்றும் எதிர்பார்க்காத சரணிற்கு பேரிடி என்று நினைத்தவனாக.. கோபத்தில் சிவந்து கொந்தளித்துக் கொண்டிருந்தாலும்.. வெளிக்காட்ட முடியாத நிலையில் இருப்பதால்.. அவளிடம் வெடித்தவனாய் இருந்தான் .

தன் கழுத்தில் ஏறிய தாலியை பற்றிய நினைப்பற்றவளாய்.. " எதுக்காக.. எதுக்காக.. ராம் ஸார் இப்படி பண்ணாரு.. அவ்வளவு தூரம் சொன்னப் பிறகு.. இந்த திருமணம்.. எதற்காக.. அருகில் இருப்பவனே.. எரியும் அடுப்பாய் இருக்கிறான் என்றால் எதிரில் இருக்கும் மயூரியை பார்த்த பிறகோ.. அய்யோ.." , என்று  அதிகமாக குளிர் எடுக்க தொடங்கிவிட்டது.

மணமக்கள் என்றதற்கு அடையாளமாக.. பட்டு உடுத்தி.. அணிகலன்கள் அணிந்திருந்தாலும்.. ஆணின் முகத்தில் இருக்க வேண்டிய கர்வமோ.. பெண்ணவளிடத்தில் இருக்கக் கூடிய நாணமோ இல்லாமல்.. இருவரும் அவரவர் யோசனையில் மூழ்கியவர்களாக.. இருந்தார்கள்.

தாமரையின் விழிகளில் கோர்த்திருந்த நீர்களோ.. இந்தோ விழுந்துவிட்டுவேன் என்று பயங்காட்டியதாக இருந்தது.

கல்யாணமே இல்லாத கல்யாணத்திற்கு.. ராம் அவளுடைய உறவுகளையும்  வரவழைத்திருக்க.. அனைத்தும் பொய்யென அவர்கள் அறியும் பொழுது.. ஏற்படப் போகும் நிலையை அறியாதவராக.. நடந்துக் கொண்டாரே என்று மேலும் தவித்துப் போனாள்.

தன் வாழ்வில் மீண்டும் நிகழவே கூடாது என்று நினைத்திருந்த ஒன்றை நிகழ்த்திக் காட்டிய.. அவன் குடும்பத்தினரின் மீதுள்ள கோபம் அதிகரித்ததாய்.. அதற்கு மேல் அருகில் இருப்பவளோ.. என்னவோ.. கிணற்றுக்குள் தள்ளிவிடுவது போல முகத்தை வைத்திருந்ததில்.. " ஏன் இவளுக்கு நான் கசக்குறேனோ.." என்ற தேவையில்லாத நினைப்பும் அவனுக்கு  விசிறிவிடுவதாய் இருக்கவே.. தன்னை கட்டுப்படுத்த வழித் தெரியாமல் குமைந்துக் கொண்டிருந்தான்.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now