அன்பே - 15

Start from the beginning
                                    

"என்னடா.. சூடு இங்க வரை தெறிக்குது.. " என்று அடங்காமல் விக்கியும் , மேலும் அவனை உசுப்பேற்றுவது போல் பேசினான்‌. சிவந்த விழிகளை அழுத்தமாக மூடி திறந்தவன், "இப்ப எதுக்கு கூப்பிட்ட.." என்று நேரடியாகவே விஷயத்திற்கு வரவும்,

" அது ஒன்னுமில்லை மச்சி.. நாளைக்கு காலேல.. எட்டு மணிக்கு , சரண் உன்னை வர சொன்னான்.. பாக்க.. வீட்டுக்கு வந்துடு.." என்றான் .

சிந்தனை முடிச்சுகள் விழ.. "எதுக்கு?"

" இதுக்கு முன்னாடி.. நீ இத்தனை கேள்வி கேட்டதா நினைப்பு இல்லையே மாமு.. " , என்று அதே நக்கலோடு கூறவே ,

" ச்சை இவன் வேற.. நேரங்கால தெரியாம.. சரி வரேன்.. " , என்று அவன் பதிலையும் எதிர்பாராமல் வைத்துவிட்டான் .

மறுநாள் காலையில், ப்ளாக் ஜீன்னும் ஸ்கை ப்ளூ சட்டையும் அணிந்து காற்றில் சிகையாட.. ஆறடி உயரத்தில்.. அளவான உடற்கட்டோடும்.‌. ஒருவித முரட்டு தனத்தை தனக்குள் அடக்கியவனாய்.. அலட்சியமாக தன் இரு சக்கர வாகனத்தை உயிர்பித்து.. அடங்கா காளையாக.. வேகமாக சரணின் இல்லத்தை நெருங்கியவன் . அதே திமிரு குறையாமல் , பார்வையால் மின்னல் தெறிக விக்கியை ஏறிட.. "போடா.. போடா.. உன்னை மாதிரி பல பேர பாத்தவன்டா..நான்.." என்பது போல் கிண்டலாக பார்த்தாலும்.."வாடா மாப்பிள.. என்ன சாப்பிடற..",

"எதுவும் வேண்டாம்.. எதுக்காக வரச் சொன்னீங்க.."என்று வந்த வேலையில் கவனமாக இருந்தவனிடம்.. புன்னகையை சிந்தியவன்.. " டேய்.. அவ ஊருக்கு போயிட்டா டா.." என்று தோள் தட்டி, உட்காரு என்று அங்கிருந்த சோஃபாவில் தள்ளிவிட்டு.. அருகே அவனும் அமர.. அவனை கடுமையாக திட்ட போனவன்.. புயலென வேகமாக நுழைந்த சரணின் வரவால் , அமைதியாகிவிட்டான் .

கம்பீரமாக தன் அலுவலக உடையில் மிடுக்காக வந்தவனின் கண்களில் இருந்த கூர்மை.. அதுவரை தேக்கி வைத்திருந்த திமிரை கைவிட்ட வைத்தது . அமைதியாய் தலை தாழ்த்தி நின்றிருந்தவனையே, அசராமல் பார்த்தவனின் மனதில் என்ன இருக்கிறது என்று விக்கியியாலும் புரிந்துக் கொள்ள முடியவில்லை . நேற்று இப்படியே இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை என்றவனின் குரலில் என்ன இருந்தது.. இல்லை என்ன நினைக்கிறான் என்று ஒன்றுமே புரியவில்லை.

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now