அன்பே - 12

Start from the beginning
                                    

மான்சியோ.. சரண் வந்திருப்பதாக கேட்டதிலேயே ஆச்சரியத்திற்கு உள்ளானாள் என்றால் , அவள் அறைக்கே அவன் வந்து நின்றது பேரதிர்ச்சியாக இருக்கவே.. தன் பெரிய மை விழிகளை முழுவதும் திறந்தவளாய் நின்றுவிட்டாள் ‌.

விழிகளால் அவள் அறையை துலாவ.. மீயூஸிக் ஸிஸ்டமும் இயக்கப்படாமல் இருக்கவே... அவள் பாடினதாக நினைத்தவன் கேட்டபோது , அவளும் மறுத்திருக்கவில்லை . அன்று சிறிது நேரம் இனிமையாக அவளோடு நேரத்தை செலவிட்டு வந்தவன் , தன் நண்பர்களிடம் தன் காதலை பகிர்ந்தவனாய் .

" டேய் சரண் என்ன சொல்ற ! " என்று ஒருபுறம் உதயதாராவும் , மறுபுறம் விக்கியும் அவன் அறையில் இருந்து அதிர்ச்சி தாளாமல் அலறினார்கள். அவன் அவளை விரும்புவதாக சொல்லியபோது... அதையெல்லாம் கண்டுக் கொள்ளாதவனாய்... விழித்திருக்கும் போதே மான்சியுடன் டூயட் பாடிக் கொண்டிருந்தான் . அவள் வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்து..

அவர்கள் துழைக்கும் பார்வைக்கும் பதில் அளிக்காதவனாய்... மான்சிக்கு அழைக்க... " மான்.." என்ற அழைப்பிலேயே அத்தனை உருக்கம் ,

" ம்.. சொல்லுடா.. என்ன இந்த டைம்ல கால் செஞ்சுயிருக்க.." என்று தேனாய் பாயும் அவள் குரலுக்கு மயங்கியவன்.. " வீடியோ கால் வா.." என்றான் .

" வாட்.. வொய்..?", என்றவளின் குரலில் அப்பட்டமான அதிர்ச்சி அலைபேசி வாயிலாக தெரிய , நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள் என்றால் , அவனோ வாய்விட்டு நகைத்து ,

"வேஷம் போட்டு இருக்கியா..‌? " என்று மிக இயல்பாக கேட்கவே.. அந்த காட்டிலும் , முகத்தில் எதையாவது அப்பிக் கொண்டு அலைபவள். வீட்டில் இருக்கும் பொழுது அமைதியாகவா இருந்திருப்பாள் என்று மிகச் சரியா ஊகித்து கேட்டதில் , அசடு வழிய ஒரு சிரிப்பை உதிர்த்து.. அதை ஏற்றுக்கொள்ள முடியாதவளாய் , "இதுக்காகவா கால் பண்ணின ? " , என்று சிணுங்களில் முழுதாய் தொலைந்தவன் , " உன் பாட்டு கேட்க.." என்றான்...

உதயாவோ , " பாட்டா.. அவளா ! " என்று அதிர்ந்திருந்த வேளையில் ,

யமுனை ஆற்றிலே
ஈர காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட
பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now