இன்று அவள் பிறந்தநாள். அவன் வாழ்விலும் மறக்க முடியாத நாள் . முதன்முதலாக , இருவரும் தனியாக சந்தித்த நாள். தன் அலைபேசியை எடுத்து எதையோ தேட , ஆனா விழிகளில் விழுந்ததோ வேறொன்று . அதுவரை தன் மனதில் அழுத்தியிருந்த பாரம் முழுதாய் மறைந்து... வெப்பமாய் உடல் தகிக்க... அதன் வெம்மை தாளாமல்... ஆ... என்று அலறியவன்... தன் அருகே இருந்த இரவு விளக்கை துகள்களாக நொறுக்கியிருந்தான் .

நிசப்தத்திற்கு சொந்தமான நடு ராத்திரியில்.. அதை அவன் தட்டிப்பறிக்க... அது மற்ற யாரை எழுப்பியதோ இல்லையோ... அவன் நண்பனை சென்றடையந்ததில்... வேகமாக.. அவன் அறைக்கு வந்தவன்... கதவை திறந்த.. கண்ட காட்சியில் உறைந்தே போய்விட்டான்.

உடைத்த விடிவிளக்கு... ' என்னை அழிக்கும் உன்னை விட மாட்டேன்..' என்று சண்டையிட்டிருக்கும் போல , அவன் உள்ளங்கையை நன்கு பதம் பார்த்திருந்தது . அதனால் ஏற்பட்ட காயம் உள்ளங்கையை கிழித்து... இரத்தம் சொட்ட நின்றிருந்தவனின் நிலையும்... ஆ... என்று அலறியவன்... மேலும் மேலும் அங்கிருக்கும் பொருட்களில் காண்பித்து அடித்து நொறுக்கியவனுக்கு போதவில்லை போலும்...‌ தன் தலைமூடியையும் இறுக்கி பிடித்தவனாக தரையில் அமர்ந்துவிட்டான் . புழுவாய் துடிக்கும் நண்பனிடம் நெருங்கவே , அச்சமாக இருந்தாலும்.., ' டேய் சரண்..' என்று அழைத்த படியே தோளில் கரம் பதித்ததும். வேகமாக எழுந்தவன்... இங்க பாரு என்று அலைபேசியை திணித்து... குளியலறைக்குள் புகுந்துவிட்டான்.

கண்கள் இரத்தமென சிவந்திருக்க.. அதரங்களோ... சற்று , தன் பட்டு வண்ண ரோஜாவில் இருந்து கருமையை போர்த்தியிருந்தது போல் இருந்தது . முகத்தில் நீர்ப்பட்டதும் , மனதின் கொந்தளிப்பு அடங்காவிடினும்... உடலின் கொந்தளப்பு குறைந்து அதன் குளுமையை ஏற்றுக் கொண்டது போலும்... உஷ்ணம் இருக்கியதாக தோன்றவே வெளி வந்தவன். உடனே பணியாளை அழைத்து சுத்தம் செய்ய கட்டளையிட்ட பின்...

" டேய் நீ எதுக்கு வந்த... வந்ததும் வந்த ஒழுங்கா வேலை பாக்குறியா... அதுவுமில்லை... பராக் பாத்துட்டு இருக்க.. உன் பொண்டாட்டியா வந்து சுத்தம் பண்ண சொல்லுவா... " , மேலே விழுந்து கடித்துக்குதறாத குறையாக கத்த...

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now