அன்பே - 10

Start from the beginning
                                    

" ம்ஹூம்... ஸ்கூலுக்கு போயிருக்காவ ரெண்டு பேரும்... தம்பிதா இருக்கா.. "

" ஓ... " என்றவளின் கரத்தில் நீர் சொம்பை திணிக்க.. வாஞ்சயையாக புன்னகைத்து.. மடக் மடக்கென சத்தம் வர நீர் அருந்தியவளை பார்க்கவே பாவமாக இருந்தது .

" எப்ப சாப்பிட..? " என்றவர் எழுந்து , காபி போட... வேண்டாம் என்று அவள் சொல்லவில்லை .

" நேத்துக்கா.. சரி.. சமாளுச்சு எப்படியாவது வீட்டுக்கு வந்துடுவோம்னு வந்துட்டேன். " என்று பெருமூச்சை வெளியேற்றியவளிடம் ,

" ஏன் புள்ள உனக்கு  இந்த தலையெழுத்து ? உன்ற சோலிய பாத்துட்டு நிம்மதியா கிடக்க வேண்டியது தான.. உன்ற அப்பனுக்கு பொறந்ததுகளுக்கெல்லாம் உழைச்சு போடவா.. உன்ற ஆத்தா பெத்துப் போட்டா ? " என்று பேச்சில் தன் கிராமிய விசனம் குறையாமல் கேட்டவளிடம் ,

" அவரு செஞ்சதுக்கு இவுக என்னக்கா  பாவம் பண்ணாங்க.. என் அம்மாக்கு தெரியாம குடும்பம் நடத்தனது மட்டுமில்லாம.. இந்த புள்ளைக காது கேக்காம.. காலு நடக்க முடியாம கிடக்குன்னு ஏமாத்தீட்டு ஓடி வந்துட்டாரு.. அப்ப அந்த பாவத்தை நாங்க தானேக்கா கழுவணும் . எந்தம்பிக்கு என்ன பொறக்கும் போதேவா இப்படி இருந்துச்சு ? குடுச்சுட்டு இந்தாளு வண்டியோடினதுனால வந்த வினைதான.. நிம்மதியா அவரும்.. இந்த புள்ளைகள பெத்தா ஆத்தாவும் போயி சேந்தாச்சு.. எப்படிக்கா ரோட்டில விட்டு வர... மனசு தாங்குதா... வேத்து வயித்துல பொறந்த புள்ளைகளா... அம்மாவும் பாக்கல நானும் பாக்கலக்கா... இன்னொரு வாட்டி இப்படி பேசாதிய...  " என்று சோகமாய் ஆரம்பித்து , பொறிவாய் முடிக்க...

" சரிடீ.. வைய்யாத... எம் மனசு கேக்காம புலம்பீட்டேன்... உன்னையாப்புல ரெண்டும் சொக்கத்தங்கங்க தான்.." என்று அவரும் ஒத்துக் கொள்ள வேண்டியதாகவே இருந்தது .

" சத்தி மட்டும் இருக்கானா ? "  என்றாள் .

" ம்.. ஆமா புள்ள.. அசந்து தூங்குறான் போல... கேட்டுயிருக்காது.. தோசை வேணா ஊத்தவா... " என்று நகர முயன்றவரை தடுத்தவள் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now