அன்பே - 7

Start from the beginning
                                    

தன் ஒற்றை காலை மடிக்கி வைத்து மற்றொரு கையை முட்டியில் வைத்து குனிந்து அவள் அருகே பார்த்திருந்தவனுக்கு , மிரண்ட அவளது பார்வையும்.. அழுகையும்‌‌.. தன் மனதை இளக வைக்கவே ... அதை விரும்பாதவனாய் முகத்தில் கடுமையை ஏற்றி உடனே ,

" இப்ப எதுக்காக அழுது இரிடேட் பண்ணீட்டு இருக்க.. போ‌‌..போய் சீக்கிரம் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணு... ", என்று கத்தி வெளியேறிவிட்டான் . பேந்த பேந்த என்று விழித்தபடியே வேகமாக எழுந்தவளுக்கு , ஆடை எங்கே..? என்று கேட்கும் தைரியமும் இருந்திருக்கவில்லை .

' இவுக.. எங்க மித்ரன் ஸாரே இல்ல‌..' மனதிற்குள் வெதும்பியவளாய் , படுக்கையில் இருந்த பையை கையில் எடுத்து உடுத்தத் தொடங்கியவள் . அவனை விழிகளால் துலாவ.. கால் மேல் கால் போட்டு.. கம்பீரமாக முன் அறையில் உட்காந்திருந்தான் .

வேங்கையின் குகைக்குள் தானாய் வந்து மாட்டிய ஆடு போல்.. உயிரை கையில் பிடித்து , அவன் முன் சென்று  நிற்க.. வா.. என்று அருகில் இருக்கும் மேஜையை காட்டினான் . அங்கே ஒரு பெண்ணும் இருக்க.. அமைதியாக அவன் காட்டிய இடத்தில் தலை நிமிராமல் அமர்ந்திருந்தவளின் முன் சுட சுட உணவு பரிமாறப்பட்டது . சாதம் , குழம்பு கூட்டு பொறியல் என்று வகைவகையாக தட்டில் நிறைந்திருக்க.. அசைவமும் இடம் பெற்றிருந்தது .

அவனும் அசைவம் சாப்பிடுகிறாயா.‌.? என்று கேட்கவில்லை அவளும் எடுத்துக் கொள்ளவில்லை . ஆனால் பசித்திருப்பவளுக்கு உணவின் வாசனையையும் அதிக தூண்டுதலாக இருக்கவே... அவசர அவசரமாக விழுங்க தொடங்கிவிட்டாள் . அருகில் இருக்கும் பெண்ணிடம் கண்களால் கட்டளையிட்டு காலியாகும் பதார்த்தங்களை அவளது தட்டில் நிரப்பிக் கொண்டிருந்தான் .

பசியின் அளவு குறைந்து வயிறு நிறைந்த பிறகே , அவன் பற்றிய ஞாபகமே மேல் எழுந்தது . அதன் பிறகே , தயக்கமாக அவன் முகம் பார்க்க.. அவனோ இதுவரை அவள் செய்த செயலை , அவன் செய்து கொண்டிருந்தான் . அதாவது அவளை கண்டுக் கொள்ளாமல் , சாப்பிடுவதில் கவனமாக இருந்தான் . 

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now