வா.. வா.. என் அன்பே - 8

Start from the beginning
                                    

வெளிர் ப்ரௌன் நிற கருவிழிகளை அழகாக உருட்டி விழித்து.. தூங்கும் தன்னை எழுப்பாமல் பார்த்துக் கொள்ளச் சொன்னான் என்றதில் எழுந்த வியப்பை.. மறைக்காமல் வெளிக்காட்டியது . அந்த சிறுபிள்ளை தனத்தில் மென்னகை உதயமானவனாக.. தன் கரத்தை அவள் முன்  நீட்டினான் . அவள் எழுவதற்காக.." பரவால்ல.. " என்று அழகாய் தவிர்த்து.. எழுந்து நின்றவளின் தலையை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு..

" ரொம்ப பயந்துட்டியா பாப்பூ.." என்றவன் அவள் கரத்தில் பணத்தை கொடுத்தான் .

" தாமரை.. ம்.. உன்னை சரண் தப்பா.." என்று வெளிப்படையாக தன் நண்பனை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் அதேசமயம் அவள் மேல் எழுந்த பரிவில்.. தயங்கியவாறே கேட்க முயன்றவனிடம் ,

" ச்சே.. ச்சே..‌ அப்படி எல்லாம் இல்லை.. நா.. உதவி கேட்டு தான் வந்தேன்னு தெரியும்.. " , என்று கூறுவதற்குள் குரல் உள்ளே சென்றுயிருந்தது .

விக்கிக்கு தெரியுமே.. காலையில் தன்னிடம் நடந்துக் கொண்ட முறையிலேயே... அவளிடம் எப்படி நடந்திருக்கிறான் என்பது . மறைக்க நினைக்கும் அப்பெண்ணிடம் தான் கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளாமல்.. சரி என்பது போல் கேட்டுக் கொண்டான் .

சரணின் நிலையோ , படு மோசமாக இருந்தது . தன் கடமை அழைக்க தவிர்க்க முடியாமல் கண்டிப்பாக கலந்துக் கொள்ள வேண்டிய தொழில் சார்ந்த கூட்டத்திற்கு வந்துவிட்டான் . ஆனாலும் நினைவுகள் என்னவோ , விட்டு வந்த இடத்தை சுற்றியே இருக்க..  மிகுந்த எரிச்சல் அடைந்தான் .

ஐந்து மணிக்கு மேல் ஆகியும் அவள் துயில் கலையாமல் போகவே.. எழுப்பவும் மனம் வரவில்லை . அதேசமயம் அவளை மட்டும் விட்டுவிட்டு செல்லவும் பிடித்தம் இல்லை .

ஒருவேளை , அச்சிறு பெண்ணிடம் இனிமையாக நடந்திருந்தாலோ.. அல்ல அவள் கூறவறுவதை பொறுமையாக கேட்டிருந்தாலோ... இந்த அவதிக்கு ஆளாகியிருக்க மாட்டான் . " நீங்க ரொம்ப நல்லவங்க மித்ரன் ஸார்.."  என்று தாமரையின் கூற்றே , அவனை முழு மிருகமாகி இருந்தது . அத்தோடு இல்லாமல் உன்னால் எனக்கு எதுவும் ஆகாது என்பது போலான பார்வை.. எனக்கு இது எதுவும் தேவையே இல்லை . நான் நல்லவனே கிடையாது என்று உரக்க மனதிற்குள் கத்தியவன்.. அவளிடத்தில் வேட்டையாடும் வேங்கையாய் மாறி.. கொத்திக் குதறித் திண்றான் .

வா.. வா... என் அன்பே...Where stories live. Discover now