அன்பே - 2

Comincia dall'inizio
                                    

" போதும் விக்கி.. உனக்கு சொன்னா புரியாது... விடு..."  என்று பல்கடித்து... தன் நெற்றியை கரத்தால் அழுத்தியவனாக கூற...

" சரி , எனக்கு எதுவும் புரிய வேண்டாம்... புரியற மாதிரி நீயே சொல்லேன்..."  என்று அவன் முன்  , ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்து கொள்ள , சரணால் தலைகுனிந்து நிற்க மட்டுமே முடிந்தது .

சரணை , பார்க்க பார்க்க மனம் தாளவில்லை . எவ்வளவு அழகானவன் . சாக்லேட் பாய் என்று அனைவராலும் கொண்டாடப்படுபவன் . நகமும் அவ்வளவு வெண்மையாக இருக்கும் . ஆனால் ! இன்று , கண்களில் கருவளையம் சூழ்ந்து , பரட்டை தலையும் , சவரம் செய்யாத தாடி மீசையும்.. கசங்கிய சட்டையுமாய் இருக்கிறான் . கோடிகளின் சொந்தக்காரன். சினிமா துறையில் வளர்ந்து வரும் முன்னனி நட்சத்திர நாயகன் . இந்த உண்மையை சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள் . இவன் தான் புன்னகை நாயகன் சரண் மித்ரன் என்றால் , ஒருவராலும் நம்பவும் முடியாது .  அப்படி இருக்கிறான் தோற்றத்தில் ! ஏன் ? பெற்றவர்களுக்கே.. இப்பொழுது , அவனை பார்த்தால் அடையாளம் தெரியுமோ... தெரியாதோ ?

ஆவதும் பெண்ணாலே... அழிவதும் பெண்ணாலே... எவ்வளவு உண்மை என்று தோன்றிற்று , விக்கிக்கு . தன் நண்பனைப் பார்த்ததும் . இன்றைய , அவன் அழிவிற்கு முழு முதற் காரணம் , அவன் மனைவியாய் இருந்த மான்சியே , என்று எண்ணாமலும் இருக்க முடியவில்லை .

" இப்ப என்ன சொல்ற ?அவள மாதிரி.. என்னையும் இருக்க சொல்றியா..? " என்று சரண் காட்டமாக சொன்னாலும்.. " என்னால அது முடியும்ன்னு நினைக்கிறியா... கண்டிப்பா முடியாதுடா..."  என்று தன் கண்ணீரை மறைக்க தலைகுனிந்து சொல்லவும் , வேகமாக எழுந்தோடி , இறுக்கிக் கொண்டான் விக்கி .

" வேண்டாம் மச்சி... நீ அவள மாதிரி இருன்னு சொல்லவே மாட்டேன்... அப்புறம் அவளுக்கும் உனக்கும் என்னடா வித்தியாசம்‌... கொஞ்ச நாள் அப்ராட் போ... அங்க உள்ள உங்க ஹோட்டல் பிசினஸை நீ பாத்துக்க... உனக்கு எப்ப இந்தியா வரணும்னு தோணுதோ... அப்ப.. வா... ஆனா இந்த குடி வேணாம் மச்சி... இப்பவே நாங்க பாதி உன்னை இழந்துட்டோம்டா... முழுசா இழக்க கண்டிப்பா முடியாது"  என்று கெஞ்சவும்... ஒருவாறு சம்மதித்துவிட்டான்...

வா.. வா... என் அன்பே...Dove le storie prendono vita. Scoprilo ora