50

1.8K 86 5
                                    

வழிகளாய்

ஒரு வேகத்தில் கேட்டைத் தாண்டிக் குதித்துவிட்டு, தற்போது எப்படி உள்ளே போவது எனத் தவித்துக் கொண்டிருந்த விஷ்வா, கேட்டில் அண்ணனின் கார் சத்தம் கேட்டு திகைத்து நின்றான்.


காரின் விளக்கொளி படாமல் சற்றே தள்ளி நின்றவன், விளக்கைத் தாண்டி கவனித்தான். பின்னாலிருந்து அவசரமாக இறங்கிக் கேட்டைத் திறந்து விட்டவனை மணி என்று அடையாளம் கண்டான். கார் உள்ளே வந்து நின்றதும் அதை நிறுத்திவிட்டு ஓட்டுனர் இருக்கையில் இருந்து இறங்கியது ரங்கா. காரிலிருந்து அண்ணன் இறங்கும்வரை இவனை யாரும் கவனிக்கவில்லை.

"நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு வந்துருங்க..." என்று அவர்களை அனுப்பிய பின் திரும்பிப் பார்த்தபோது சர்வேஸ்வரன் கண்ணில் அவன் பட்டான். இருட்டோடு ஒன்றிக்கொண்டு, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு...

"விஷ்வா....?!"

ஆண்டுக்கணக்கில் பிரிந்திருந்த சோகம் அவன் நெஞ்சைப் பிளக்க, இரண்டெட்டில் தாவி ஓடிவந்து அவரை ஆரத் தழுவிக்கொண்டான் அவன்.

"அண்ணா!"

அவன் உணர்ச்சிகரமாக அவரை அழைக்க, அவருக்குமே கோபமெல்லாம் தற்காலிகமாக மறைந்து பாசம் பெருக்கெடுத்தது.
"விஷ்வா.."

ஆதுரமாக அணைத்து உச்சி முகர்ந்தார் அவனை.

"எப்டிடா இருக்க என் தங்கமே?"

"நல்லா இருக்கேண்ணா... உங்ககிட்ட சொல்லாம ஓடிப் போனதுக்கு சாரி அண்ணா.. உங்களை எல்லாம் எவ்ளோ மிஸ் பண்ணேன்னு எனக்கு தான் தெரியும்."

"நாங்க மட்டும் உன்னை நினைக்காம இருப்போமாடா? தினமும் உன்னைப் பத்தி பேசாத நேரமே கிடையாதுடா.. விஷ்வா.. நீ பத்தரமா திரும்பி வந்ததே போதும்.."

மீண்டும் அவனை இறுக்கி அணைத்துக்கொண்டு பெருமூச்செரிந்தார் அவர். விஷ்வாவுக்கும் அவரது பாசம் நிறையத் தேவைப்பட்டது. சந்தோஷமாய் அவரது தோளில் சாய்ந்துகொண்டான்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now