43

1.7K 84 7
                                    

விளையாட்டு

விஷ்வா தான் கூறியது எதுவும் அன்று அவளுக்குக் கேட்கவில்லை என்று தெரிந்ததும் வாய்விட்டுச் சிரித்தான்.

"பைத்தியமே! பேசினா எல்லா பிரச்சனையும் தீரும்னு சொல்லுவியே... ஒரு தடவை வந்து என்கிட்ட கேட்டிருந்தா, இல்ல திட்டியிருந்தாக் கூட உனக்குப் புரிஞ்சிருக்குமே! ஒரு வாரமா இத மனசிலயே வச்சுக்கிட்டு கவலைப் பட்டுகிட்டு இருந்தியா?"

"நீ எதுவும் பேசாம தலைகுனிஞ்சு நின்ன... அதான் நான் நெனைச்சது கரெக்டுன்னு புரிஞ்சுக்கிட்டேன்"

"உங்கிட்ட மொதல்ல சொல்லலன்னு லேசா வருத்தமா இருந்தது... அதான். அதுக்கப்றம் என்னை பேச விட வேண்டாமா?"

"நீ ஏதோ சமாதானம் சொல்றன்னு நெனைச்சேன்"

"சுத்தம்!"

வாய்விட்டு அவன் சிரிக்க, அவள் தலைகவிழ்ந்து அமர்ந்திருக்க, அவள் திமிறினாலும் அவளை விடாமல் அணைத்துக் கொண்டான் அவன். முகமெல்லாம் முத்தமிட்டு தன் அன்பைக் கொட்டினான்.

"ப்ச், விஷ்வா! விடு என்னை. எனக்கு இதெல்லாம் வேணாம்.."

அவனது பிடியிலிருந்து அவள் தப்ப முயன்று கொண்டிருந்தபோது மருத்துவர் வந்தார்.

"Excuse me, she's a patient"

"Uh.. sorry doctor. Please.."
வழிவிட்டு ஒதுங்கி நின்றான் அவன். முகத்தில் அசட்டுச் சிரிப்பு.

"How are you feeling Miss....Mahima?"

"I'm good, doctor. We'll get going"

"Sure. Sign these papers and you're good to go"

"Thanks, doctor"

அவர் காட்டிய தாள்களில் கையொப்பமிட்டு, தன் உடமைகளை சரிபார்த்து எடுத்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்ப எழுந்தாள். சோர்வாக இருந்ததால் கால்கள் தள்ளாடின. அவளை விழாமல் பிடித்தவன், அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு நடந்தான்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now