20

1.8K 89 3
                                    

என்னவளே

ஒரு மாதம் கடந்திருந்தது.

சர்வேஸ்வரன்-வசுந்தரா திருமணம் விமரிசையாக நடைபெற்றது. மண்டபம், சாப்பாடு அனைத்தும் விஷ்வா பொறுப்பில் சிறப்பாக விளங்கின. அண்ணனும் அண்ணியும் தம்பதியராக வந்து நிற்கவும் ஊரே மெச்சியது. அன்னை அன்னபூரணி ஆனந்தத்தில் திளைத்தார். அவருக்குத் தான் இளைய மகனைப் பற்றிய கவலையும் தீர்ந்துவிட்டதே!

மஹிமா மனதில் மாற்றமில்லை. விஷ்வாவும் அதுவரையில் அவளிடம் ஏதும் பேசவில்லை. அனைவருக்கும் அழைப்பிதழ் தந்தவன் மஹிமாவிடம் தரலாமா வேண்டாமா என யோசனையுடன் வந்தபோது அவளே எழுந்து சென்றுவிட்டாள். இருவரும் அந்நியர்கள் போல் பார்த்தும் பேசாமல், ஒருவரையொருவர் தவிர்த்துக் கொண்டு கல்லூரி வந்துசென்றனர்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது அவர்களது நட்புவட்டமே. இவன் வந்தால் அவள் வரமாட்டாள். அவள் வந்தால் இவன் வரமாட்டான். நண்பர்கள் யாருக்கு முக்கியத்துவம் அளிப்பது எனக் குழம்பித் தவித்தனர்.

ஆண்டுத் தேர்வுகள் வந்தன. வழக்கம்போல் மஹிமா தனியாக வீட்டிலும், மற்றவர்கள் கல்லூரியில் குழுவாகவும் படிக்கத் தொடங்கினர்.மஹிமா படிப்பில் முழுக்கவனம் செலுத்திப் படித்தாள். தன் சொந்தப் பிரச்சனைகள் எதுவும் தேர்வை பாதிக்கக்கூடாது என இராப்பகலாக உழைத்தாள். தேர்வு தினங்களில் கூட யாருடனும் முகம் கொடுத்துப் பேசவில்லை.

விஷ்வா சற்றே இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தான். நண்பர்கள், பாடங்கள், வீடு, உறவினர் என அவன் வாழ்க்கை வேகமாக ஓடியது. அண்ணி வசுந்தரா அண்ணனுக்கு மேல் இவனிடம் பாசத்தைப் பொழிந்தார். விஷ்வா கேட்காமலேயே அவனுக்கு வேண்டியது எல்லாம் நடந்தது.

கடைசிப் பரீட்சையன்று வழக்கம்போல் அவன் பரீட்சை எழுதியவுடன் கேண்ட்டீன் சென்று தேநீர் அருந்திவிட்டு, வீட்டிற்கு கிளம்ப பைக்கை எடுக்க பார்க்கிங் நோக்கி நடந்தான். பழக்கப்பட்ட குரல் கேட்டதும் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now