51

2.1K 88 11
                                    

தொடக்கம்

பன்னிரெண்டு மாதங்கள் போனதே தெரியவில்லை.

மஹிமா இப்போது அவர்களது நிறுவனத்திலேயே உதவி மேலாளராகப் பணிபுரிந்தாள். அவள் வந்த நேரமோ, அவளது திறமையின் விளைவோ, அல்லது தந்தையின் உற்சாகமோ... அவர்கள் நிறுவனம் இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி வாணிக நிறுவனங்களுள் ஒன்றானது.

வேலை தலைக்கு மேல் இருந்தாலும், அவனை நினைக்காமல் ஒரு நாள் கூடக் கழியாது அவளுக்கு. முன்பெல்லாம் தினமும் பேசுவார்கள். பின் இரண்டொரு தினங்களில். பின் வாரக்கடைசிகளில். அதன்பின் எப்போதாவது மட்டும் என்றாகியிருந்தது.

அவனுக்கு அடிக்கடி அழைக்க முயற்சிப்பாள் அவள். ஆனால் அழைக்கும்போதெல்லாம் துண்டித்துவிட்டு, 'Will call later, love you' என்று குறுஞ்செய்தி மட்டுமே அனுப்புவான் அவன். திருப்பி ஒருநாள் கூடக் கூப்பிட்டதில்லை.

இன்றும் அதே செய்தி வந்ததும், 'செய்தி நம்பர் இருநூறு' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு பெருமூச்சு விட்டாள்.

அப்பா இத்தோடு ஐம்பது ஃபோட்டோக்களாவது காட்டியிருப்பார். ஒவ்வொரு முறையும்,
'இப்ப என்ன அவசரம்பா?'
'கொஞ்ச நாள் போகட்டும்பா'
'இந்த பையன் நல்லா இல்லப்பா'
'வேலை பயங்கரமா இருக்குப்பா' என எதாவது காரணத்தைச் சொல்லிக்கொண்டு தப்பித்தாள்.

அப்பாவை ஏமாற்றுவது கஷ்டமாகத் தான் இருந்தது. ஆனால் அவனைக் கேட்காமல் எதுவும் பேசவும் முடியாமல் தவித்தாள் அவள்.

இன்று பொறுமையெல்லாம் போய்விட்டது. கொஞ்சம் கோபமும் வந்தது.

'எங்கிட்டக் கூட சொல்லாம என்ன தான் பண்ணிட்டு இருக்கான்?'

மீண்டும் அழைக்க, மீண்டும் அதே குறுஞ்செய்தி. அவள் ஆவேசமாக பதில் செய்தி டைப் பண்ணினாள்.

'It's your message no.201, Vishwa. I don't know what you think. I haven't talked to you since I've last seen you. Your messages keep raising my hopes, only to drop them at the end of the day. I really really miss you... and I need to be with you. Why can't you talk to me, as usual? Why do you wanna hide anything from me? What exactly are you doing? Where are you, how are you, when will you return? I wanna be near you so badly. Please...talk to me... And please, come soon'

மெய்மறந்து நின்றேனேNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ