9

2.2K 111 7
                                    

உள்ளம் சொல்லும்

பக்திச் சுற்றுலாவின் தாக்கம் மஹிமாவிடம் நன்றாகவே தெரிந்தது. தனிமையில் அமர்ந்து மனதை அமைதியாக்கி நிதானமாக சிந்திக்க முடிந்தது.

விஷ்வாமீது ஈர்ப்பு வரக் காரணம் ஏதோ வயசுக் கோளாறு... அல்லது, நண்பர்கள் பிரிந்து அவர்வர் வழியில் சென்றதால் தனிமையைப் போக்கத் துணைதேட முயல்கிற மனதின் கோளாறு.

இது ஒரு phase. அவ்வளவே. இதனால் ஒரு நல்ல நட்பு வீணாகக் கூடாது.

'எல்லையற்ற பேராற்றல் உனக்குள்ளே உள்ளது. எண்ணங்கள் உன்னுடையவை. உன்னால் ஆனவை. உன்னால் மட்டுமே உன்னுடைய மனதை கட்டுப்படுத்த முடியும். Focus Mahi, focus.'

விடுமுறை முடிந்து மீண்டும் கல்லூரி திறந்தது. தேர்வு முடிவுகளைப் பார்க்க அறிவிப்புப் பலகையை மொய்த்தது மாணவர் கூட்டம். மஹிமாவுக்கு அந்த வேலையை யாரும் வைக்கவில்லை. அவள் உள்ளே நடந்து வந்தபோதே ஆதிஷ் கைகளை விரித்து ஆட்டியவாறே அவளிடம் வந்தான்.

"Congrats Mahi, class topper!!"

"நானா? நெஜமாவா?"
நிஜமாகவே அப்பாவித்தனமாகக் கேட்டாள் அவள்.

"என்ன தன்னடக்கமா? நம்பலன்னா நோட்டிஸ் போர்டை பாரு"

அதற்கு அவசியமே இருக்கவில்லை. அவளது வகுப்புத் தோழர்கள் அனைவரும் அவளைச் சூழ்ந்துகொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். விஷ்வாவும் வந்து நின்றிருந்தான்.

"கன்கிராட்ஸ்டி, டாப்பர்!"

"Thanks people! நான் சும்மா பாஸானா போதும்னுதான் படிச்சேன்"

"அச்சோடா...எல்லா டாப்பரும் விடற அதே ரீல்!"

"ஹே.. இல்லபா.. நிஜமா--"

"சரி சரி.. மறக்காம ட்ரீட் வச்சிடு."

"ஆமா மஹி.. ட்ரீட் கண்டிப்பா வேணும்"

ஆளாளுக்குப் பாராட்டிவிட்டும், ட்ரீட் கேட்டுவிட்டும் நகர்ந்தனர். அவர்களுக்குத் தலையாட்டிவிட்டு அவளும் வகுப்பறைக்கு நடந்தாள். அப்பாவிடம் கைபேசியில் அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவரும் மகிழ்ந்தார். பேராசிரியர்கள் கூட பாராட்டினர் அவளை. மாலை கேண்ட்டீனில் அனைவருக்கும் ட்ரீட் வாங்கித் தருவதாக ஒத்துக்கொண்டாள் அவள்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now