8

2.3K 104 3
                                    

கனாக்காலம்

கல்லூரி வாழ்க்கை கல்கண்டாக இனித்தது மஹிமாவுக்கு.

காலை ஒன்பது மணிக்கு க்ளாஸ். பள்ளியில் இருந்தது போல் பொதுவழிபாட்டு அஸெம்ப்ளி எல்லாம் கிடையாது. இருபது பேர்தான் ஒரு வகுப்பில். ஆண்கள் பத்து; பெண்கள் பத்து. சீருடை கிடையாது. இஷ்டப்பட்ட உடைகளை அணியலாம், சீராக.

ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும் குறைந்தது பத்து நிமிட இடைவேளை. எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் அதில்.

கல்லூரியில் சேர்ந்ததற்காக, மஹிமாவுக்கு அவளது அப்பா ஒரு புது நவீன கைபேசி வேறு வாங்கித் தந்திருந்தார்.  அதைக்கொண்டு வானம், தெருவிளக்கு, நாய்க்குட்டி, குப்பைத்தொட்டி எனப் பார்ப்பதையெல்லாம் நிழற்படமாய் எடுத்தாள் அவள். 5ஜி இணையத் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் எல்லாவற்றிலும் இணைந்து வளைய வந்தாள். கல்லூரி தந்த உற்சாகத்தில் அவளது கதையையும் கொஞ்ச கொஞ்சமாக வளர்க்கத் தொடங்கினாள்.

நாயகன் நாயகியின் உயிராக இருந்தான். அவள் கண்களைப் பார்த்தே அவள் கூற வருவதை அறிந்துகொண்டான். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் முதல்முறை சந்தித்தபோதே அவர்களுக்குள் ஒரு பந்தம் உருவானது. அவனைப் பார்த்தவுடன் நாயகி மயங்கினாள். தன் வாழ்க்கை இவன்தான் எனப் புரிந்துகொண்டாள்...

அவளது கதை முழுதும் இனிமைகள் மட்டுமே இருந்தன. சிரிப்பும், சந்தோஷமும், உற்சாகமுமாக, அவளது வாழ்க்கையை போலவே கதையும் நகர்ந்தது. ஆனாலும் ஏதோ குறையாக இருப்பது போலவே தோன்றியது அவளுக்கு.

விஷ்வா, மஹிமா, ரஞ்சனா, பிரகாஷ் ,ஆதீஷ், ப்ரதிபா அனைவரும் கூட்டுக்காரர்களாக மாறினர். எப்போதும் மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் பழகினர். மஹிமா விஷ்வாவுடனே பேருந்தில் சென்று வந்தாள் கல்லூரிக்கு.

அவ்வப்போது அலைபேசியில் ஜோஷி அழைப்பான். வேணி வெளிநாட்டில் CA படிப்பதால் எப்போதாவது வாட்ஸ்ஸாப்பில் பேசுவாள். நண்பர்கள் உடனில்லையே என அவ்வப்போது ஏங்குவாள். மற்றபடி அவர்கள் வாழ்க்கை தெள்ளாறு போலச் சென்றது. ஒரு வருடம் சென்றதே தெரியாத அளவிற்கு வேகமாக நகர்ந்தது வாழ்க்கை.

மெய்மறந்து நின்றேனேHikayelerin yaşadığı yer. Şimdi keşfedin