"அதுக்குள்ள எழுத்திருச்சிட்ட.."

குரல் கேட்டு நிமிர்ந்தவன். குளித்துவிட்டு நேற்றைய புடவையிலேயே வந்தவளைப் பார்த்து வியந்தான்.

"காலேஜ்க்கு சேரீ கட்டிட்டு போறயா?"

"காலேஜா?"

"ப்ரெஸன்டேஷன்... சீக்கிரம் போகணும்னு சொன்ன?"

அவள் சிரிப்பில் அறிந்துகொண்டான் அவன். "பொய்யா?"

"சும்மா..." அவள் நாக்கை நீட்டி அழகுகாட்ட, அவன் முறைத்தான்.

அவனருகில் சென்று அமர்ந்தாள் அவள்.
"Today is your day. இன்னிக்கு முழுக்க உன்னோட தான் இருப்பேன். நீ எங்கெல்லாம் போகணுமோ, என்னவெல்லாம் செய்யணுமோ, எல்லாம் பண்ணலாம். ஓகே?"

"நெஜமாவா சொல்ற?"

"நம்பலன்னா போ!"

அவள் எழுந்து போவதுபோல் செல்ல, இடுப்பை வளைத்துப் பிடித்தான் அவளை.

"போலாம் வா!"

லண்டன் நகரம் இன்னும் துயில் விழிக்கவில்லை. சோம்பல் முறித்துக் கொண்டு அப்போதுதான் கதிரவன் எழத் தொடங்கியது. அவனோடு கைகோர்த்துக் கொண்டு வீதியில் நடந்தாள் மஹிமா. குளிர்காற்று மூச்சுக்குள் நுழைந்து நெஞ்சம்வரை தீண்டியது. மூச்சுவிடுவதுகூட புகைபோல தெரிந்தது.

பத்து நிமிடம் நடந்து ம்யூஸ்வெல் குன்றின் அடிவாரத்தில் நின்றனர்.

"மேல ஏறப் போறோமா?"
அவளது குரலில் பயமும் தயக்கமும் தெரிந்தது.

"நான் இருக்கறப்போ என்ன பயம் உனக்கு?" என்று அவளை இழுத்துக் கொண்டு மேலே நடந்தான் அவன்.

கடல்மட்டத்தில் இருந்து நானூறு அடிகள் உயர்ந்திருந்தது அந்தக் குன்று. ஆங்காங்கே பழமையான கோட்டைகளும், கோல்ஃப் மைதானங்களும் தென்பட்டன. வழியெங்கும் காட்டு மலர்கள் பூத்திருந்தன. தார் சாலை போடப்பட்டிருந்தாலும், அவன் மண்பாதையிலேயே அவளை அழைத்துச் சென்றான்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now