இதற்கு அவனை அழைக்காமலே இருந்திருக்கலாம் என்று தோன்றியது அவளுக்கு. மீண்டும் வாட்டத்தோடு படுக்கையில் சாய்ந்தாள்.

அலைபேசியில் குறுஞ்செய்திக்கான அறிவிப்பு ஒலி வந்தது. சோர்வாக அதை எடுத்தாள்.

'இந்நேரத்தில யார் மெஸேஜ் பண்றது?'

விஷ்வாதான் அனுப்பியிருந்தான்.
'வெளியில் வந்து கொஞ்சம் கதவைத் திறந்து விடவும்..'

பக்கென்று இருந்தது அவளுக்கு. நான்கே எட்டில் வாசலுக்கு ஓடினாள் அவள். கதவைத் திறந்து வெளிக் கேட்டை அடைந்தாள். அவள் நினைத்தது போலவே அவன் வந்திருந்தான். கல்லாய் சமைந்து நின்றவளைப் பார்த்துப் புன்னகைத்தவாறே, தான் வந்த காரிலிருந்து தன் பைகளை இறக்கி எடுத்தான்.

"இன்னைக்கு இங்க இருந்துட்டு, காலைல ஏர்ப்போர்ட் கிளம்பிடறேன்" அவளுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு, வீட்டை நோக்கி நடந்தான்.

கதவை அடைந்தவன் அவளைத் திரும்பிப் பார்த்து, "May I?" என்றான்.

சுதாரித்துக் கொண்டவள், "Yeah sure. Welcome" என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

"வீடு ரொம்ப அழகா இருக்கு மஹி"

"தேங்க்ஸ். கெஸ்ட் ரூம் இங்க இருக்கு" என்றபடி அவனது பை ஒன்றை வாங்கி அந்த அறையில் இருந்த அலமாரியில் வைத்தாள்.

"எனக்கு ஒரு போர்வை கிடைக்குமா...இங்க கொஞ்சம் குளுருது."

அப்போதுதான் மஹிமா கவனித்தாள். தனது அறையில் இருப்பதுபோல் இங்கே room heater இல்லை. ஏப்ரல் மாதம் என்றாலும் குளிர் இருந்தது. அவள் சென்று தன் அறையில் இருந்த கனத்த போர்வையை சிரமப்பட்டு எடுத்து வந்தாள்.

"இது போதுமா?"

"போதும். தேங்க்ஸ்"

தலையசைத்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றவளை கைப்பிடித்து நிறுத்தினான் அவன்.

"தூக்கம் வரலன்னு சொன்னியே? கொஞ்ச நேரம் பேசலாமா?"

மஹிமாவுக்கு மறுக்கத் தோன்றவில்லை. ஆனால் அவனோடு தனியாக அமர்ந்து பேசவும் தயக்கமாக இருந்தது. இரண்டு மனதோடு அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து அவன் முகம்பார்த்தாள்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now