"ஓ... எத்தன நாள் டைம் வேணுமாம்? நாளைக்கு கான்ஃபரன்ஸ் முடிஞ்சதும் நாளான்னைக்கே நம்ம கிளம்பறோம். அதுக்குள்ள சொல்லிடுவாளா?"

"பாக்கலாம்.."

பரத்தின் அறையில் இருந்து தன்னறைக்கு வந்தவன், பலப்பல கனவுகளுடன் உறங்கிப் போனான்.

மாலை நான்கு மணிக்கு அவனது கைபேசி அடித்து அவனை எழுப்பியது. டீம் லீடர் அழைத்திருந்தார்.

"ஸார்...ஆமா ஸார். இதோ இப்ப வந்துட்டேன் ஸார்"

அவசரமாக முகத்தை கழுவிவிட்டு அவர் வரச் சொன்ன அறைக்கு ஓடினான். அவன் செய்ய வேண்டிய வேலைகளை அவனுக்கு விளக்கினார் அவர். பின் ஒரு மூட்டை நிறைய ஃபைல்களை அவனுக்குக் கொடுத்து அனுப்பினார். நொந்துகொண்டே தன்னறைக்கு வந்தவன் வேலையில் மும்முரமானான்.

இரவு பத்து மணியளவில் அவனது வேலை முடிந்தது. அதைத் தலைவரிடம் தந்துவிட்டு உணவருந்தச் சென்றான் அவன். அவர்கள் தங்கியிருந்தது ஒரு மூன்றாம்தர விடுதி என்பதால், சுற்றியிருந்த கடைகளும் எதுவும் நன்றாக இல்லை.

நீண்ட தூரம் கடைதேடி நடந்தவன், இறுதியில் ஒரு இந்திய உணவகத்தைக் கண்டான். விலை சற்றே கூடுதல் என்றாலும், உணவு சிறப்பாக இருந்தது. உண்ட களைப்பில் உடனே உறங்கிப் போனான் அவன்.

மறுநாள் அவனது குழு கிங்ஸ் கல்லூரிக்கு கலந்துரையாடலுக்குக் கிளம்பினர். அவனுக்கு வேலை எதுவும் இனி இல்லை என்றாலும், திடீரென்று டேட்டா எதாவது தேடவேண்டும் என்றால் அவனைக் கேட்கலாம் என்பதால் அவனையும் வரச்சொன்னார் தலைவர்.

அவனும் ஆர்வத்தோடு கிளம்பினான்.

இன்று தான் அவர்கள் லண்டனின் மத்தியப் பகுதிக்குள் வந்திருந்தனர். அங்கிருந்த சாலைகள், வாகனங்கள், கட்டிடங்கள் என அனைத்தையும் வியந்து பார்த்தவாறே வந்தனர் விஷ்வாவும் பரத்தும்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now