முதலாம் வருடத் தேர்வு வந்தது. Study holidays என்று பத்து நாள் தந்தனர். நண்பர்கள் கல்லூரிக்கு வந்து குழுவாகப் படிக்க முடிவெடுத்த போது, மஹிமா வீட்டிலிருந்து படிக்க எண்ணினாள். கடைசி இரண்டு நாட்கள் மட்டும் group studyக்கு வருவதாகச் சொன்னாள். அவர்கள் லேசாக ஆட்சேபித்தாலும், அவள் உறுதியாக மறுத்ததால் விட்டுவிட்டனர். மற்றவர்கள் எண்ணம்போல கல்லூரியிலேயே வந்து படித்தனர். விஷ்வா அடிக்கடி வாட்ஸ்ஸாப்பில் வந்து டவுட் கேட்டான்.

வீட்டில் மஹிமாவுக்கு ஏதோபோல் இருந்தது. பத்து நாட்கள் யாரையும் பார்க்காமல் என்னவோ போல் இருந்தது.


யாரையும் பார்க்காமல்... ??

இவர்களை ஒரு வருடமாகத்தானே தெரியும்.. அதற்குள் என்ன இத்தனை கரிசனம்? கொஞ்சம் சிந்தித்தாள்... அவளுக்கு மீண்டும் மீண்டும் ஒரு பதில்தான் கிடைத்தது.

விஷ்வா.

ஆம்... அவனைத்தான் பார்க்கத் துடித்தாள்.

சேச்சே... என்ன நினைப்பு இது? அவனுக்கு இதெல்லாம் தெரிந்தால்? நல்ல நண்பனாகப் பழகும் அவனை ஏன் ஏதேதோ நினைக்கிறேன்? இது சரியில்லை மஹி... ஒதுக்கு...தப்பான எண்ணங்களை ஒதுக்கு.

தேர்வுகள் வந்தன. எண்ணங்கள் யாவும் அதில் மட்டுமே சென்றது. ஆறு பேப்பர். இரண்டு ப்ராக்டிகல். எட்டு வைவா(viva).

மூன்று வாரங்கள் தேர்வில் சென்றன. இயல்பாகவே பேசிச் சிரித்துப் படித்து பழகினாலும் விஷ்வாவிடம் பேசும்போது இப்போதெல்லாம் வார்த்தைகளில் தடுமாற்றம் வருவதையும் மனது குறுகுறுப்பதையும் மஹிமா கவனிக்காமல் இல்லை.

தப்பு. தப்பு. செய்யாதே மஹி.

கடைசி நாள் பரீட்சை. முடிந்ததும் ஒரு மாதம் விடுமுறை. அவரவர் பேசி விடைபெற்றுக் கொண்டனர். விஷ்வாவிடம் கேட்டபோது அவன் வீட்டில்தான் இருப்பதாகச் சொன்னான். மஹிமாவுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now