வரம் - 20

Começar do início
                                    

ஆரவ் பேசியதை கேட்டு சிலை போல் அங்கேயே நின்றாள் மீரா.  ஆரவ் பெற்றோர் அவனை தடுக்க அவனுடன் செல்ல மீரா அங்கேயே நின்றாள்.  மீராவை அழைக்க வந்த விஜய் ஆரவ் பேசியதை கேட்டு கோவம் வந்தாலும் மீராவை சமாதானம் செய்ய அவள் அருகில் சென்று அவளை அழைத்தான். விஜய் குரல் கேட்டவள் சூழ்நிலை உணர்ந்து கண்களை துடைத்துக் கொண்டு புன்னகையுடன் திரும்பினாள்.

"விஜி இங்க என்ன பன்ற உள்ள போலாம் வா" என்று அவன் கை பிடித்து இழுக்க விஜய் அவளை தடுத்து நிறுத்தினான்.

"எப்படி டி எதுவும் நடக்காத மாதிரி பேசற"

"என்ன நடந்தது எதும் நடக்கல வா போலாம் " என்று அவனை வேறு எதுவும் பேச விடாமல் அழைத்துச் சென்றாள்.

ஆரவ் கோவமாக உள்ளே செல்ல அங்கு அருண் தருண் நின்றிருந்தனர் அவர்களிடம் சென்றவன்.

"நீங்களும் இதல கூட்டா " என்று ஆரவ் கோவமாக கேட்க அவன் எதை கேட்கிறான் என்று தெரியாமல் இருவரும் விழித்தனர். ஆரவ் அம்மா அங்கு வந்து அவனிடம்

"டேய் இது கோவில் அமைதியா இரு நீ கல்யாணம் பன்னிக்க வேனா பொண்ண பார்த்துட்டு புடிக்கலன்னு சொல்லிரு" என்று கூற அவனும் முகத்தை கோவமாக வைத்துக் கொண்டு அவர்களுடன் சென்றான். அதே நேரம் விஜயும் மீராவும் உள்ளே வர மீரா விஜயுடன் சென்று அவன் குடும்பத்துடன் நின்றுக் கொண்டாள்.

பின் ஆரவ் குடும்பமும் விஜய் குடும்பமும் அமர்ந்துக் கொண்டிருக்க தியா தலையை கீழே போட்டுக் கொண்டு கண்களில் கண்ணீர் இப்பொழுது வந்து விடுவேன் என்ற நிலமையில் இருந்தாள்.

"ஆரவ் பொண்ண பாரு டா" என்று அருண் கூற ஆரவ் அவனை முறைத்தான்.

"தியா மாப்பிள்ளைய பார் புடிக்கலன்ன சொல்லு" என்று விஜய் அம்மா கூற தியா மெதுவாக நிமிர்ந்து ஒரு முறை பார்த்து தலையை கீழே போட போக ஆரவை கண்டதும் மீண்டும் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.  கண்கள் கலங்க பெற்றோரை பார்க்க அவர்கள் விஜயை கண் காட்டினர். தியா விஜயை பார்க்க அவன் ஆரவ் மேல் கோபமாக இருந்தாலும் தன் தங்கையை பார்த்ததும் சிரித்தான். தியா கண்களாளே நன்றி கூற அவன் முறைத்தான்.

கேட்கா வரமடா நீOnde histórias criam vida. Descubra agora