58.அத்தியாயம்

424 17 6
                                    

ஒளிர்மதி தனதறைக்கு வந்து குளித்து இலகுவான உடையணிந்து தலை வாரியபடியே கண்ணாடி முன் நின்றாள். உடையணிந்தபோது வெளியே விழுந்த தாலி அவளது பிம்பத்தை கண்ணாடியில் இன்னும் பொலிவோடு காட்டியது.

தாலி கழுத்தை சுற்றி இருப்பது, சிம்புத்தேவன் கை வளைவில் இருக்கும் மாயை தர, தன்னையும் மீறி புன்னகைத்திருந்தாள்.

சற்று முன் வலம்புரியிடம் அவன் பேசியதை இத்தனை நேரம் உருப்போட்டவளுக்கு, அவனது ஏக்கத்தின் வலியில் தனது பங்கும் இருப்பதாகவே தோன்றியது.

ஒரு கணவனாக அவன் ஒருபோதும் அவளை நெருங்கியதில்லை. தாலி கட்டிவிட்டேன் என அவனது ஆதிக்கத்தை காட்டவில்லை. மாறாக, மனதளவில் வெகுவாக அவளை நெருங்கியவன். அவளை மதிக்க தெரிந்தவன். அவன் அதற்கு பதிலாக கேட்பது காதலை தான்.

'கொடுத்துவிடேன்' என மனம் கூற, பட்டென வந்தது பதில் 'கொடுத்துவிடுகிறேன்' என. தன்னை நினைத்து அவளுக்கே திகைப்பு கூட, மறுநொடி சிலிர்த்து சிரித்திருந்தாள்.

இதுவரை பார்வைகள் தாண்டி பரிமாறாத தனது மறைமுக காதலை வார்த்தைகள் கொண்டு இருவரது வாழ்க்கையிலும் அறிமுகப்படுத்த நினைத்தாள். ஆனால் எல்லோரையும் போலவும், காதல் என வந்ததும் அதை வெளிப்படுத்த முடியாமல் இயல்பாக அச்சம் வந்து ஒட்டிக் கொள்ள, நீண்ட நேர யோசனையில் இருந்தவளை சாப்பிட அழைக்க வந்த மதிவதனி மகளது பரிதவிப்பான முகத்தை ஏந்திக்கொண்டார்.

"என்னாச்சு?", என்றார்.

"ம்மா!", என தவித்தவள், "நான் இனிமே தேவ் கூடவே இருக்கப்போறேன்.", என்றாள். மதிவதனி இதை ஓரளவு எதிர்பார்த்தது என்பதால் இயல்பாக, சரி எனும் விதத்தில் தலையசைத்தார்.

"ஆனா... ஹ... இது எப்டி சொல்றதுனே தெரியல.", என முகம் வாடினாள்.

"ஓஹ்! லவ்வுக்கு அம்மாவ உதவிக்கு கூப்பிடுறியா?", மதிவதனி கேட்டுவிட்டு புருவம் தூக்க, அவரது குறும்புத்தன பேச்சை உணர்ந்தவள், "கேட்டா என்ன தப்பு? நீங்க தான் லவ் குரு ஆச்சே!", என சிரித்தாள்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ