53.அத்தியாயம்

377 14 2
                                    

சிவா தாமஸ் வர சொன்னதால்... சிம்புத்தேவன், அன்பன், அமுதன் மற்றும் ஒளிர்மதியை இறக்கிவிட்டு உடனே கிளம்பிவிட்டான்.

வாசல் கடந்து உள்ளே இருந்த போர்டிகோ அருகே ஏற்கனவே நின்றிருந்த வெண்மதி, வெற்றிச்செல்வன், அன்புமதி மற்றும் அறிவுமதி, சிம்புத்தேவனை கண்டு திகைத்ததெல்லாம் ஒரு நிமிடம் தான், மறுநொடியே, "வாங்க மாமா!", என இரு மதிகளும் சிம்புத்தேவனை வரவேற்க, மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.

ஒருநொடி இடைவெளியில் சிம்புத்தேவன் கண்கள் வெண்மதியை தொட்டு மீண்டதை ஒளிர்மதியும் கவனித்திருந்தாள்.

இவர்களது குரல் கேட்டு முதலமைச்சர் வெளியே வர, அங்கு சிம்புத்தேவனை கண்டவரது முகம் என்ன பிரதிபலிக்கிறதென புரியவில்லை.

"ஜனவரி மாசம் தான் பொங்கல் வருங்கிறது மத்தவங்களுக்கு! நமக்கு முப்பொழுதும் பொங்கல் தான், இப்போ கிழவி புருஷரு எமோஷனலா கத்த போறாரு, ஜவ்வு கிழியப்பபகுது!", என அமுதன் ஒளிர்மதியிடம் முணுமுணுக்க,

"நாம பேசாம, தேவாவையும் மயங்க சொல்லிடலாம்! தாத்தா பதறிடுவாரு!", அவள் குதூகலமாக கூற,

"உனக்கு மூளைக்கு பதிலா மசாலா இருக்குறது தெரியும், ஆனா மசாலா கடையே மூளைக்குள்ள இருக்கும்னு இப்போதான் தெரியும்!", அமுதன் சீரியசாக கூற,

"ச்சீ பே!", என திரும்பிக்கொண்டாள்.

முதலமைச்சர் சில நொடிகளில் சிம்புத்தேவன் அருகே வந்தவர், அவனது கன்னம் தாங்க, "தாத்தா மன்னிச்சிடுங்க! என் மேலயும் தப்புகள் இருக்கு, ரொம்ப அடிபட்டுட்டேன் தாத்தா. உலகத்துல இனி எங்க போனாலும், நான் தாய்மாடி சேருற மாதிரி இடம் இதுவா இருக்கனும் நினைக்கிறேன். ஏத்துப்பீங்களா?", என பலவீனமான குரலில் தனது ஏக்கத்தை கூறிய சிம்புத்தேவனை முதலமைச்சர் அணைத்து உடல் குலுங்க அழுதிருந்தார். அக்கண்ணீர் சிம்புத்தேவனுக்கானது மட்டுமல்ல, வசுமதிகாகாவும் தான் என உணர்ந்தனர்.

அன்பனை தவிர மற்றவர்கள் அதை கண்டு மகிழ்ச்சியாக புன்னகைக்க, மகமாயி கணவரை கண்டு கண் கலங்கினார். அவரது ஆசை இது தானே!

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟حيث تعيش القصص. اكتشف الآن