32.அத்தியாயம்

349 16 4
                                    

வலம்புரி தனது படிப்பை முடித்து, சிஏ படிப்பை தொடங்கியிருந்தான். வண்ணமதி பதினோராவது வகுப்பில் இருக்கிறாள், வசுமதி மருத்துவ படிப்பில் மூன்றாம் ஆண்டில் இருந்தாள். ஒரு வருடம் எப்படி போனதென்றே தெரியவில்லை. மகமாயி, முதலமைச்சருக்கு மருமகளை தாண்டி மகளாகவே மாறிப்போனாள் மதிவதனி.

அனைவரது அன்புமே கிடைத்தபோதும், அதில் மனம் மகிழ்ந்து நெகிழ்ந்தபோதும், அவள் தங்களது அறைக்குள் இருக்கும்போது தனித்தீவில் வாழும் உணர்வே.

மாதம் ஒரு முறை அழைப்பான். ஐஎஸ்டி கால் வரும்! குடும்பமே அவனிடம் பேசி வளவளத்துக்கொள்வர், இறுதியாக மதிவதனியிடம் அலைப்பேசி தரப்படும் போது நேரத்தோடு வார்த்தைகளும் பஞ்சமாகிவிடும். தொண்டை அடைக்கும். பெருமூச்சுவிட்டு அவன் பேசினால், 'ம்ம்' என்ற பதிலில் இவள் முடித்துவிடுவாள். ஏனோ நேரில் பார்த்து பேசும் அந்த உணர்வு தொலைப்பேசியிடம் இல்லை.

மேலும் ஒரு வருடம் கடக்க, வலம்புரி இப்போது ஒரு ஆடிட்டர். வசுமதி தேர்வு, மருத்துவமனையில் இன்டர்ஷிப் என மிகுந்த வேலைகளோடு நான்காம் ஆண்டு படிக்கிறாள், வண்ணமதி பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கிறாள், தற்போது கம்ப்யூட்டர் மற்றும் டைப் கிளாஸ் சென்று வருகிறாள். மகமாயி வளர்த்த இரு மாடுகளோடு இப்போது இரு கன்றும், ஒரு காளையும் சேர்ந்துவிட்டது. முதலமைச்சரது தொழிலில் ஏக போக லாபம் கூட, இரு சொந்த நிலங்களை வாங்கிவிட்டார். மதிவதனியின் நாட்கள் அவளை போலவே இயல்போடு தான் போகிறது. என்ன இரு வருடங்கள் கடந்தும், பாராசக்தியால் வெளிநாட்டிலிருந்து திரும்ப முடியவில்லை, ஆனால் சீக்கிரமே வருவதாக மட்டும் கூறிவிட்டான்.

இப்போது வீட்டில் வலம்புரியின் திருமண பேச்சு சில நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. பராசக்தி தான், அவனுக்கு தெரிந்த ஒருவரது பெண்ணான சங்கீதா பற்றி கூறினான், இளங்கலை கணினி அறிவியில் படித்தவள்.

பராசக்தி கூறியதால் முதலமைச்சர் அப்பெண்ணின் தந்தையிடம் பேசிப்பார்க்க, அவர்களும் ஜாதகம் அனுப்ப, இருவருக்கும் பொருந்தி வரவே, திருமணம் முடிக்கப்பட்டது. இதற்கிடையே தாமஸ் மற்றும் சர்தார்ஜியின் மகளான ரேகாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது, முதலமைச்சர் மற்றும் மகமாயியோடு திருமணத்துக்கு சென்றுவந்தாள் மதிவதனி.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now