55.அத்தியாயம்

423 18 4
                                    

ந்தர்வ கோட்டை சமஸ்தானம் ஆடிப்போனது போல... ஒளிர்மதியின் பேச்சை கேட்டு முதலமைச்சர் குடும்பமே ஆடிப்போனது. ஏற்கனவே தெரிந்த விஷயமென்றாலும் இங்க பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தினால் கூறுகிறேன்!

முதலமைச்சர் வீட்டில் ஒன்று அவரது குரல் ஒலிக்கும், இல்லை மகமாயி குரல் ஓங்கி ஒலிக்கும். மகன், மருமகளும் சரி... பேத்திகளும் சரி! கத்தி பேசுவதென்பது நடக்காது ஒன்று. அதனால் தான் சகோதரிகள் மூவரும் அடித்துக்கொள்வது கூட அறைக்குள்ளே முடிந்துவிடும்.

அப்படியிருக்க, ஒளிர்மதியின் க்ரீச் குரல் தொலைந்து இப்போது நியாயமாக ஒலித்த அவளது குரலில் தெரிந்த ஆதங்கமும் கோபமும் பார்த்திராதவர்கள் ஆடிப்போவது இயல்பு தானே!

தன்னையே அனைவரும் பார்ப்பதை உணர்ந்தே தான் உணர்ச்சி வசப்பட்டதை உணர்ந்தவள் சற்றே தணிந்து அன்பனை காண, அவளை உறுத்து விழித்துக்கொண்டிருந்தான், அதில் 'நீயா பேசியது?', என்ற பாவனை இருந்தது.

அப்பட்டமாக ஒத்துக்கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் சிம்புத்தேவனோ குளிர்ந்த மனதோடு நின்றிருந்தான். இத்தனை நேரம் அன்பன் வார்த்தைகள் தந்த காயமோ, அவன் பார்வை தந்த குற்றவுணர்வுகள் துறந்து, அவன் காதல் கேள்விக்கு கிடைத்த மறைமுக பாசிட்டிவ் பதிலால் மனம் தகதிமிதா தாளம் போட்டு குத்தாட்டம் போட்டது!

வலம்புரி சங்கீதா ஒருவரையொருவர் பார்த்து பின் மதிவதனியை கண்டனர். மூவரது மனமுமே அவர்கள் கனடா செல்லும் முன் பேசியதில் நின்றது.

"ல்யாணங்கிறது எவ்ளோ ஆத்மார்த்தமான விஷயம்! இவ இப்டி தேவாவ பிரியறது அவ விருப்பம்னாலும், சொசைட்டில் அவள தப்பா தான பேசுவாங்க!", என சங்கீதா மதிவதனியிடம் குறைப்பட்டுக்கொள்ள,

தூரத்தில் அன்புமதி, அறிவுமதி, அமுதனோடு சிரித்து பேசும் ஒளிர்மதி மற்றும் சில இடைவெளியில் அவளை நின்று ரசிக்கும் சிம்புத்தேவனையும் கண்டுவிட்டு, "நீ நம்புறியா கீதா? அவங்க பிரிஞ்சிட்டாங்கனு...", என்றவரை சங்கீதா மற்றும் வலம்புரி கேள்வியாக கண்டனர்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Onde as histórias ganham vida. Descobre agora