48.அத்தியாயம்

370 13 6
                                    

சக்தி மருத்துவமனையின் சிகிச்சை பிரிவின் கதவுகள் திறக்க, தாமஸ் மற்றும் அவரது குழுவினர் கிள்ளிவளவனை ஒருபுறமும், ஒளிர்மதியை ஒருபுறமும், உள்ளே கொண்டு சென்றனர்.

வெளியே தீவரமான முகபாவத்தோடு அமுதனும், சிம்புத்தேவனும் நின்றிருக்க, கனத்துப்போன இதயத்தோடு, இருக்கையின் நுனியில் கையிலிட்ட கட்டோடு அமர்ந்திருந்தான் அன்பன்.

அவனுக்குள் பல போராட்டங்கள். ஏற்கனவே தன் தந்தையால் ஒளிர்மதி துன்பமடைந்தாள் என்பதே அவன் மனதை குத்தியிருக்க, இதில் தந்தையின் குற்றங்கள் உண்மையே என்றானதும், அவனுக்கு முகமே செத்துவிட்டது.

சற்று முன்னர் நடந்தவைகளை யோசித்தன அவனது மூளை, சிம்புத்தேவன் மற்றும் அமுதனும் இதையே தான் அவர்கள் வரவழைத்திருந்த வலம்புரி மற்றும் முதலமைச்சரிடம் கூறிக்கொண்டிருந்தனர்.

_ _ _ _ _

ஒளிர்மதி தனக்கு வேண்டியது கிடைத்துவிட்ட திருப்தியில் ஒருவகை புன்னகையை இதழில் படரவிட்டவள், "உங்க உயிர், என் கையில இருக்குற துப்பாக்கி முனையில நின்னு, 'என்ன எடுத்துக்கோனு சொல்லுது'. எடுத்துக்கோன்னு சொல்லிட்டு அப்டியே விட்டு போனா எப்டி? நல்லாயிருக்காதுல!", என அவர் கேட்டது போலவே இப்போது அவரிடம் கேட்டாள் அதில் ஏளனமோ நக்கலோ ஒளிந்திருந்தது.

"மாமா", ஒளிர்மதி இசையன்பனை அழைத்தாள். அத்தனை நேரம் வெறிப்பிடித்தவள் போல் இருந்தவள் தற்போது ஏக்கத்தின் உச்சியிலும், குற்றவுணர்வின் எல்லையிலும் நின்றிருந்தாள்.

அவள் கையிலிருந்த துப்பாக்கியை, அவள் கையோடு சேர்த்து பற்றிக்கொண்டவன், அவளது முகத்தை கண்களாலே சோகமாக வருடினான்.

அவனருகே நின்றபடி, அமுதன் நின்றிருக்கும் இடம் திரும்பியவள், "என்ன அரெஸ்ட் செஞ்சிடு ஹனி!", என தன் கையை குறிப்பால் உணர்த்தினாள்.

"லூசு பேபி!", என கண்ணீரோடு கூறியவன், அவள் கையிலிருந்த துப்பாக்கியை வாங்கிக்கொண்டான்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now