43.அத்தியாயம்

378 15 10
                                    

மதிவதனி பராசக்தி அழகான பேர் மட்டுமில்ல, ஜோடி பொருத்தமும் அழகு தான்ல! எனக்கு பொதுவாவே காதல் கதைகள கேட்க ரொம்ப பிடிக்கும்ங்க. அதுக்கு காரணமெல்லாம் தெரியாது, காதல் ரசிக்க காரணம் தேவையில்லையே!

அதனாலோ என்னவோ எனக்கு இந்த காதல் பிடிச்சு போச்சு. இந்த மூன்றெழுத்து வார்த்தைக்குள்ள தான் எவ்ளோ மாயாஜாலம். கோடி கோடியான சொத்துக்கள், உலகமே புகழ்ற அளவுக்கான பாப்புளாரிட்டி, நினைச்சு நேரத்துக்கு சுதந்நிரமா ஊர் சுத்துறது இதெல்லாம் எனக்கு வேண்டாம், காதல் அது போதும்.

இப்போ தான் எனக்கு தெரிஞ்சது நான் ஏன் இந்த காதல இவ்ளோ ரசிக்கிறேன்னு, சக்தி-வதனி பொண்ணா இருந்துட்டு, நான் காதலிக்காம இருந்தா தான் தப்பு...

சக்தி அப்பாவுக்கு கிடைச்ச தாமஸ் அங்கிள் மாதிரி, கீர்த்தனா ஆண்ட்டிக்காக இருந்த வதனி அம்மா மாதிரியான நட்புகள நான் சம்பாரிக்கல. ஏனோ ஒரு இறுக்கமான சூழ்நிலையிலயே நான் வாழ்ந்துட்டேன் போல. எனக்கும் ப்ரெண்ட்ஸ் இருக்கனும், ஜாலியா வெளிய போகனும், நாங்க ஒருத்தர ஒருத்தர கிண்டல் பண்ணிக்கனும்னுலாம் யோசிச்சிருக்கேன். ஏனோ அப்டி ஒரு தோழமை கூட்டம் எனக்கு அமையல. அது ஏக்கமா இருந்ததே தவிர, ஏமாற்றமா மாறல, காரணம் அன்பன்&அமுதன். நட்புல பாலினம் இல்ல. நட்பு நட்பு தான்!

ஆனா வதனி அம்மா, சக்தி அப்பா சொன்ன மாதிரி, 'வித்தியாசமானவங்க!'. கீர்த்தனாவோட குழந்தைகள தன் குழந்தையா பாவிச்சு, ஒரு தாயாக தன் உதிரத்தையும் தர துணிஞ்சது கேட்டதும், உண்மையாவே அந்த நட்போட ஆழம் எவ்ளோனு புரிஞ்சிக்கிட்டேன். நெருப்புக்குச்சிய கீழ்நோக்கி பிடிச்சாலும், அதோட ஜூவாலை மேல்நோக்கி தான் வரும். அது போல தான் எவ்ளோ தான் வதனிம்மாவ மத்தவங்க எல்லாரும் அவமதிச்சு அவங்கள புரிஞ்சிக்காம போனாலும், நஷ்டமென்னவோ அந்த மத்தவங்களுக்கே தான்! உத்தமன் அங்கிள் கொஞ்சம் யோசிச்சிருந்தா, வெற்றிச்செல்வன் வெண்மதி, வதனிம்மா மூணுபேரும் ஊர் பேர் தெரியாத இடத்துல அனாதை மாதிரி வாழ்ந்திருக்கமாட்டாங்க. ஆனா ஒருவகையில எல்லாருமே இந்த விஷயம் நடக்க காரணமாகிட்டாங்க.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Donde viven las historias. Descúbrelo ahora