6.அத்தியாயம்

479 15 2
                                    

நடந்த அனைத்து விஷயமும் வீட்டிற்கு வந்த வலம்புரிக்கு தெரிய வந்தது. ஒளிர்மதி விண்ணப்பித்த விஷயம் அவருக்கும் அமுதனுக்கும் மட்டும் தான் தெரியும், (இது ரகசியம்😁).

சங்கீதா மயக்கமானதால் அவருக்கு ஓய்வளித்துவிட்டு, சமையல் கட்டில் குழம்பு வைக்க காய்கறிகளை தயாராக நறுக்கிக்கொண்டிருந்த மகளருகே வந்தார்.

"மதிம்மா!"

"சொல்லுங்கப்பா!"

"அப்பாவ பாக்க மாட்டியாடா?"

அவள் நிமிர்ந்தாள், பாட்டியின் கைத்தடம் கன்னத்தில் பதிந்து ஒருபக்க கன்னம் பன்னு போல் ஆகியிருந்தது.

அவர் வாஞ்சையாக அவளது தலையை வருட, "சாரிப்பா என்னால வீட்டுல எல்லாருக்குமே மனஸ்தாபம் வந்திடுச்சு!", என அவரது தோளில் சாய்ந்து அழுதுவிட்டாள்.

"உன் தப்பு எதுவுமே இல்லம்மா! இந்த வீட்டு பொண்ணுங்களோட ராசி அப்டி!", என்றார் பழைய நினைவுகளில் சோகமாக.

"அப்பா! நான் ஒன்னு தெரிஞ்சிக்கனும்!"

"என்னது?"

"வசுமதி அத்தைக்கு என்னாச்சு? அவங்கள பத்தி ஏன் சொல்லாம மறைக்கிறீங்க எல்லாரும்?", என்ற மகளை கண்டு கலக்கமாகியவர், "அதபத்திலாம் பேசாத!", என இலகுத்தன்மை மறைந்து இறுகிப்போனார்.

"அப்பா ப்ளீஸ்!"

"இல்லடா! சில விஷயங்கள் தெரிஞ்சிக்கிறத விட, அத மறைச்சு வைக்கிறது தான் நல்லது!", என்றவர், "நான் சாம்பார் வைக்குறேன்!", என்று அவள் நறுக்கிக்கொண்டிருந்த காய்கறிகளை தன்பக்கம் எடுத்துக்கொண்டு, வேலைகளை செய்ய துவங்கினார்.

"ஐயோ! நீ சமைக்கிறத பாட்டி பாத்தா திட்டுவாங்கப்பா!", என்று பதட்டமாக, அறை வாசலில் பாட்டி குரல் கேட்டது.

"வீட்டுல இத்தன பொம்பள புள்ள இருக்கீங்க, உங்கப்பா தான் சமைக்கனுமா! எல்லாம் விதி, வந்தது சரியில்ல,வாச்சதும் சரியில்ல!", என்று அவரை போலவே அமுதன் பேசிக்காட்ட, வலம்புரி சிரித்துவிட்டார். ஒளிர்மதி புன்னகைத்தாள்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now