36.அத்தியாயம்

328 17 8
                                    

மதிவதனி அவனை பிரியப்போவதாக சொல்லிவிட்டு செல்ல, தாமஸிடம் உடனடியாக தன்னை டிஸ்சார்ஜ் செய்யும்படி கெஞ்சினான். அவன் மறுக்கவே, மதிவதனி சொல்லியவற்றை கூற, தாமஸ் அதிர்ந்தான். சற்று முன் அவள் விறுவிறுவென செல்வதை வெளியே நின்றிருந்த ரேகா, வசுமதி, தாமஸ் கண்டாலும், அதை பெரிதுபடுத்தவில்லை. இப்போது காரணம் விளங்கவே, மாலை போல் டிஸ்சார்ஜ் ஆகிய பராசக்தி அவளை தேடும் பணியை துவங்கினான்.

வியர்வையில் கசகசத்த உடலோடும்,
அவளை பார்க்க வேண்டும் என்ற காதல் நிறைந்த கருவளையம் வந்த கண்களோடும்,
அவளுக்கெனவே துடிக்கும் இதயத்தொடும்,
பேருந்து நெரிசலில்,
சாலை கூட்டத்தில்,
வாழ்ந்த ஊரிலே, அங்கும் இங்குமாய் அழைந்தான் அகதியை போல!

இறுதியில், சோர்வோடு அவன் வீடு வந்து சேர, ஏற்கனவே கதவு திறந்திருக்க, ஏதோ புரிந்தவனாக அவசரமாக உள்ளே வந்தவன், சமையலறையில் நின்றிருந்த மதிவதனியை கண்டு அழுகையும் அதிர்வுமாக அவளை ஓடிப்போய் இறுக கட்டிக்கொண்டான்.

"கல்நெஞ்சுடி உனக்கு, என்ன அழவச்சு பாக்க அவ்ளோ ஆசையா? பைத்தியக்காரன் மாதிரி சுத்த வச்சிட்டல!", என அழுகையோடு பேசினான்.

"பயந்துட்டியா?"

"செத்துட்டேன்!"

"நான் கூட தான் காலையில உன்ன அந்த நிலமையில பாத்து செத்து போக இருந்தேன், என் கண்ணீரோ, கோபமா என்னோட வலிய உனக்கு உணர்த்தாது... அதனால தான் அப்டி பேசினேன்.", என்றவள், "ஆனாலும் சாரி சக்தி, ரொம்ப தேடுனியா?", என்று கண்களை சுருக்கினாள் மன்னிப்போடு.

"என்ன ரொம்ப சோதிக்கிறடி!", என எப்போதும் போல் அவளது புருவம் தொடங்கி வலக்கண் மச்சம் வரை காற்றிலே கோடிழுத்தவனது கன்னத்தை வலிக்காமல் தட்டவும், "உனக்கு தூக்கமே கிடையாதுடி!", என அவளை கைகளில் ஏந்திக்கொண்டவனது தலையில் செல்லமாக குட்டு வைத்து சிரித்தாள்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now