15.அத்தியாயம்

380 18 6
                                    

முன்பை போல் ஒளிர்மதியால் இயல்பாக இருக்க முடியவில்லை. இருமாதம் தாக்கு பிடித்தவளால், அதற்கு பிறகும் வீட்டினரை பிரிந்து வாழ்வது, மூச்சிற்கு திணுறுவது போல் இருந்தது.

பாட்டி திட்டினாலும், தாத்தா முகத்தை தூக்கி வைத்தாலும், அம்மா அடித்தாலும், தங்கைகள் முறுக்கிக்கொண்டாலும் பரவாயில்லை, இவ்வாரம் விடுமுறை கூறி வீட்டிற்கு சென்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவள் அதே யோசனையில் கைகளில் வதக்க வேண்டிய காய்களை வைத்துக்கொண்டு நிற்க, அடுப்பில் வைத்த வெறும் வாணலி சூடாகி புகை பறக்க, அதன் பின்னே உணர்ந்தவள், அவசரமாக தட்டை போட்டுவிட்டு, வாணலியை வெறும் கையிலே எடுத்து வைக்க, அவ்வளவு தான் இப்போது மொத்த சூடும் அவளது கைகளை புண்ணாக்கிவிட்டது.

"ஆ...", என அலறல் சத்தம் காதை கிழித்தது.

தன் முன்னே இருந்த ப்ரெட் மற்றும் ஜாமை வெறுப்போடு கண்டவளது கைகளில் மருந்து தடவப்பட்டிருந்தது.

புண்ணான கைகள் ஏற்படுத்தும் வலியைவிட, உடன் தனிமை மட்டும் துணையாக இருப்பது தான் அதிக வலியை தந்தது.

அந்நேரம் மேஜை மீதிருந்த அலைப்பேசி ஒலி எழுப்ப, பார்த்தாள், 'ஹனி!', என மிளிர்ந்தது. காணோளி அழைப்பு தான். அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ ஹனி!", என்று புன்னகைக்க முயன்றாள்.

"பேபி! ஏன் வாய்ஸ் வித்தியாசமா இருக்கு? ஆர் யூ ஓகே?", அமுதன் கேட்கவும்,

"அதுவா...", என்றவள் சற்று முன்பு நடந்த நிகழ்வினை சொல்ல, "சோனமுத்தா போச்சா?", என்று கலகலவென சிரித்துவிட்டான்.

அதில் கோபம் வந்தவளோ, "போடாங்... உன்கிட்ட சொன்னேன்ல!", என கண்களை உருட்டினாள்.

அவன் சிரிப்பை அடக்கிக்கொண்டு, "சரிவிடு ஐயாச்சாமி, இதெல்லாம் சமையல்னு வந்துட்டா சாதாரணம்! மருந்து போட்டியா?", என்றான்.

"அதெல்லாம் அப்பவே, ட்ரீட்மெண்ட் பண்ணிட்டேன். லைட்டா வலியும் எரிச்சலும் தான்.", என்றாள் முகத்தை கோணலாக வைத்து.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now