49.அத்தியாயம்

351 12 8
                                    

அமுதன் கூறியதால் அங்கு வந்த வெண்பாவோ, அவ்விடத்தில் மதிவதனி மற்றும் வெற்றிச்செல்வனை கண்டு விழி விரித்து, "மதி", என அவரை அணைத்துக்கொண்டாள்.

இது என்னடா புது கதை என்ற ரீதியில் மற்றவர்கள் அந்த காட்சியை காண, சிம்புத்தேவன் பார்வையாலே வெற்றிச்செல்வனிடம் என்னவென வினவ, "இவதான் என் தங்கை, வெண்மதி!", என்றதும் அவன் அதிர்ந்தான்.

இங்கு மதிவதனியை அணைத்தவள், "மதி! ஒளிருக்கு ஒன்னும் ஆகாது. அழாதீங்க!", என கன்னம் தட்டி புன்னகைத்தாள். மதிவதனி லேசாக புன்னகைத்தவர், மற்றவர்களை கண்டு, "என் பசங்க, வெண்மதி, வெற்றிச்செல்வன்!", என அறிமுகம் செய்தார்.

"நீ வெண்மதினு ஏன் முன்னாடியே சொல்லல?", என சிம்புத்தேவன் கேட்க, அத்தனை நாட்கள் அவள் கண்களில் தெரியாத ஒரு வெறுப்பு இன்று தாரளமாக அவள் கண்கள் வெளிப்படுத்தின.

"பர்ஸ்னல வேலையில இழுக்க பிடிக்கல!", என்றாள் அலட்சியமாக.

"என்னடா பேசுறா இவ?", என அமுதனிடம் கேட்டவனை, "அவருக்கு தெரியும்!", என்றாளே பார்க்கலாம். அமுதனுக்கு தெரியாமல் இருக்குமா? அவளோடு பேசும்போதே மேலோட்டமாக தனது குடும்பத்தை பற்றி கூறியிருந்தாள். அதன் பிறகே, இவர்கள் உதவி நாடி சிம்புத்தேவன் வர, அமுதன் வெண்மதியிடம் எல்லாம் கூற, அப்போது தான் அவனுக்குமே தெரிய வந்தது.

சிம்புதேவனுக்கோ..  ஆக தன்னை நன்றாக ஏமாற்றிவிட்டாள், தன் அக்கா கீர்த்தனாவின் மகள் தான் தான் என முன்பே சொன்னால் என்ன! எத்தனை மகிழ்ச்சியான விடயத்தை மறைத்துவிட்டாளே என நொந்தவன், சற்றே கோபமாக, "அதான் ஏன்? என்கிட்ட சொல்ல என்ன?", என சுற்றம் மறந்து, அவள் மட்டுமே அங்கிருக்கும் பாவனையில் பேசினான்.

"ஏன் சொல்லனும்?", என்ற கேள்வி அவனுக்கு அபத்தமாக பட்டது. இத்தனை நாள் கீர்த்தனா பற்றியும், கிள்ளிவளவன் பற்றி என அனைவரையும் தெரிந்துக்கொள்ள உடனிருந்து உதவி செய்து, தனக்காக மெனக்டெல் செய்து என இருந்தவள், தன்னிடம் இதை மறைப்பது தவறு என்பது அவன் எண்ணம்.

[✔]💟உயிரின் நிழலாய் வருடுகிறாய்💟Where stories live. Discover now